Enable Javscript for better performance
கல்லூரி ஊழியர் வீட்டில் 17 பவுன் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    கோவை சித்ரா அருகே தனியார் கல்லூரி ஊழியர் ஒருவரது வீட்டில் 17 பவுன் நகை மற்றும் ரூ. 83 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
     கோவை சித்ரா அருகே, பூங்கோதை நகரில் வசித்து வருபவர் ஆர்.ஸ்ரீதர் (26), இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் நிகழாண்டு மார்ச் 23-ஆம் தேதி வரை இவரது வீட்டில் புதுப்பிக்கும் பணி நடந்து வந்துள்ளது. அப்போது வெளி ஆள்கள் பலர் வீட்டுக்கு வந்து சென்றுள்ளனர்.
     இதனிடையே, ஸ்ரீதரின் வீட்டில் பீரோவில் வைத்திருந்த 17 பவுன் நகை மற்றும் ரூ. 83 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து ஸ்ரீதர் கொடுத்த புகாரின் பேரில் பீளமேடு போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai