Enable Javscript for better performance
நூலகத்துக்குள் மழைநீர் புகாமல் தடுக்க நடவடிக்கை- Dinamani

சுடச்சுட

    

    அன்னூரில் கடந்த புதன்கிழமை பெய்த மழையால் கிளை நூலகத்துக்குள் தண்ணீர் புகுந்தது. இதுகுறித்து தினமணியில் செய்தி வெளியானது, இதையடுத்து நூலகம் முன் தண்ணீர் தேங்குவதைத் தடுக்க பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வியாழக்கிழமை வாய்க்கால் வெட்டப்பட்டது.  
    அன்னூரில் புதன்கிழமை மாலை 3 மணியளவில் பலத்த மழை பெய்தது. இதனால் அன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் நூலகத்துக்குள் மழைநீர் புகுந்தது. மேலும் நூலகம் முன்பு குளம்போல் மழைநீர் தேங்கி நின்றது. இதுகுறித்து தினமணி நாளிதழில் வியாழக்கிழமை செய்தி வெளியானது.
    இதையடுத்து பேரூராட்சி கவுன்சிலர் கனகராஜ் உள்ளிட்டோர் மேற்பார்வையில் நூலகத்தின் முன்பு தேங்கியிருந்த மழைநீரை அன்னூர் குளத்துக்குள் செல்லும் வகையில் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் வாய்க்கால் வெட்டப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai