Enable Javscript for better performance
அரசுப் பள்ளியில் கட்டணம் வசூலிப்பதாக ஆட்சியரிடம் புகார்- Dinamani

சுடச்சுட

    

    அரசுப் பள்ளியில் கட்டணம் வசூலிப்பதாக ஆட்சியரிடம் புகார்

    By kirthika  |   Published on : 07th June 2016 10:55 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை சின்ன தடாகம் அரசு பெண்கள் மற்றும் ஆண்கள் பள்ளியில் மாணவர்களிடம் கல்விக் கட்டணம் வசூலிப்பதாக பெற்றோர் தரப்பில் ஆட்சியரிம் புகார் அளிக்கப்பட்டது.
    இதுகுறித்து ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக்கிடம், ஆனைகட்டி பழங்குடியினர் மலை கிராமங்களைச் சேர்ந்த பெற்றோர் மற்றும் ஊர் பொதுமக்கள் தரப்பில் அளித்த மனு:
    ஆனைகட்டி பகுதியில் இயங்கி வரும் அரசுப் பழங்குடியினர் உண்டு, உறைவிட உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே உள்ளது. எனவே, மேல்நிலைக் கல்விக்கு சின்ன தடாகத்தில் உள்ள அரசு பெண்கள் மற்றும் ஆண்கள் பள்ளிகளில் சேர்ந்து படிக்க வேண்டிய நிலை உள்ளது. இதில், நடப்புக் கல்வியாண்டில் பள்ளியில் சேர்ந்த மாணவர்களிடம் கல்விக் கட்டணமாக ரூ.1,105 வசூலிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியரிடம் கேட்டபோது கணினி பயிற்சி கட்டணமாக ரூ.200-ம், பெற்றோர்-ஆசிரியர் சங்கக் கட்டணமாக ரூ.50-ம், கொடிக்கு ரூ.5-ம், பெற்றோர்-ஆசிரியர் சங்கத்தால் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க ரூ.850-ம் என மொத்தம் ரூ.1,105 கட்டணம் வசூலித்துள்ளனர்.
    அரசுப் பள்ளிகளில் இலவசக் கல்வியை தமிழக அரசு அளித்து வருகிறது. இந்நிலையில், அரசுப் பள்ளியிலேயே கட்டணம் வசூல் செய்திருப்பது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    தரமான சாலை கோரி...: வேடப்பட்டி பேரூராட்சிக்கு உள்பட்ட 6-ஆவது வார்டில் புதிய சாலை அமைக்க ஒப்பந்தப் பணி வழங்கப்பட்டது. ஆனால், ஒப்பந்ததாரர் பழைய தார் சாலையை எடுத்துவிட்டு அங்கு ஜல்லி மற்றும் சிமென்ட் கலந்து கான்கிரீட் சாலை அமைத்தார்.
    ஆனால், தேவையான அளவு சிமெண்ட் போடாத காரணத்தால் சாலை பெயர்ந்து வருகிறது. எனவே, இங்கு தரமான சாலை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவர் ஆட்சியரிடம் மனு அளித்தார்.
    அரசு நிலத்தை மீட்கக் கோரி...: கோவை இருகூர் பேரூராட்சி அத்தப்பகவுண்டன்புதூரில் 4 ஏக்கர் அரசு நிலத்தில் தனியார் நிறுவனம் மரம் நட முயற்சி எடுக்கப்பட்டது. இதுகுறித்துஅளித்த புகாரின் பேரில், தனியார் நிறுவனத்தின் முயற்சி தடுக்கப்பட்டது. மேலும், இந்த நிலத்தை மீட்க வருவாய்த் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரத்தில் அத்தப்பகவுண்டன்புதூரில் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த 450 குடும்பங்கள் உள்ளன. இதில், வீடு இல்லாதவர்களுக்கு அங்கு வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai