சுடச்சுட

  

  கூடலூரை அடுத்த போஸ்பாறா பகுதியில் மறுவாழ்வுத் திட்டத்தை விரைந்து செயல்படுத்தக் கோரி அப்பகுதி மக்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  முதுமலையை அடுத்த சேரங்கோடு ஊராட்சிக்கு உள்பட்ட சன்னக்கொல்லி பகுதியில் மறுவாழ்வுத் திட்டம் நீண்ட காலமாக செயல்படுத்தப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது. இத்திட்டத்தை விரைவில் நிறைவேற்றக்கோரி அப்பகுதி பழங்குடி மக்கள் போஸ்பாறா பகுதியில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  இத்தகவல் அறிந்து வந்த கூடலூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசலு மற்றும் வருவாய்த் துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், அப்பகுதியில் மறுவாழ்வுத் திட்டம் விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
  இதையடுத்து, பழங்குடி மக்கள் ஆர்ப்பாட்டத்தைக் கைவிட்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai