சுடச்சுட

    

    சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், திருநெல்வேலி நகர காவல் நிலையத்தில் வியாழக்கிழமை கையெழுத்திட்டார். இதையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான கோகுல்ராஜ், நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அருகே ரயில் பாதையில் கொலையுண்டு கிடந்தார். இந்த வழக்கு தொடர்பாக திருச்செங்கோடு காவல் துறையினர் வழக்குப் பதிந்து சிலரைக் கைது செய்தனர்.

    இந்த வழக்கில் தேடப்பட்டுவந்த முக்கிய நபரான, சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த யுவராஜ், கடந்த அக்டோபரில் சரணடைந்தார். இதையடுத்து, அவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் ஜாமீன் வழங்கியது. மேலும், திருநெல்வேலி நகரில் தங்கி, காவல் நிலையத்தில் காலையிலும் மாலையிலும் கையெழுத்திடவும் நிபந்தனை விதித்தது.

    இந்நிலையில், வேலூர் மத்திய சிறையிலிருந்து விடுதலையான யுவராஜ், திருநெல்வேலிக்கு வியாழக்கிழமை காலை வந்தார்.

    இதையொட்டி, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் திருஞானம் உத்தரவின்பேரில், துணை ஆணையர் சந்தீப், கூடுதல் ஆணையர் இளங்கோ, உதவி ஆணையர் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீஸார் திருநெல்வேலி நகரக் காவல் நிலையம் முன் குவிக்கப்பட்டிருந்தனர்.

    யுவராஜ் காலை 10 மணிக்கு காவல் நிலையத்துக்கு வந்து கையெழுத்திட்டார். பின்னர், மாலையிலும் கையெழுத்திட்டார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai