Enable Javscript for better performance
காடையாம்பட்டி அருகே "அம்மா' திட்ட முகாம்- Dinamani

சுடச்சுட

    

    சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகேயுள்ள கே.என்.புதூர் கிராமத்தில் "அம்மா' திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    முகாமிற்கு வட்டாட்சியர் என்.எஸ்.ராஜேஷ்குமார் தலைமை வகித்தார். இந்த முகாமில், பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இதில், புதிய ரேஷன் கார்டு, முதியோர் உதவித் தொகை கோரி 85 பேர் மனுக்கள் அளித்தனர்.

    முகாமில் மக்களைத் தேடி வருவாய்த் துறை என்ற தலைப்பில், வருவாய்த் துறை சார்பில் செயல்படுத்தப்படும் நலத்திட்ட உதவிகள், அதனை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.

    எடப்பாடியில்..

    எடப்பாடி வட்டம், ஆவணிப்பேரூர் மேல்முகம் கிராமத்தில் நடைபெற்ற "அம்மா' திட்ட முகாமில் 64 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.

    முகாமிற்கு வட்டாட்சியர் எஸ்.சண்முகவள்ளி தலைமை வகித்து மனுக்களைப் பெற்றார். நகர்மன்றத் தலைவர் டி.கதிரேசன், சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு திட்டத்தின் சிறப்புகள் பற்றி விளக்கிப் பேசினார்.

    முகாமில் துணைத் தலைவர் சி.ராமன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனிவட்டாட்சியர் மகேஸ்வரி, எடப்பாடி வட்ட வழங்கல் அலுவலர் மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித் தொகை, குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் திருத்தம், பிறப்புச் சான்றிதழ் ஆகியவை வழங்கக்கோரி 186 மனுக்கள் பெறப்பட்டதில் தகுதியான 64 மனுக்களுக்கு உடனடி உத்தரவை வட்டாட்சியர் எஸ்.சண்முகவள்ளி வழங்கினார். இம்முகாமில் வி.ஏ.ஒ. அப்புசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai