Enable Javscript for better performance
நிலக்கோட்டையில் ஜூன் 8 முதல் 16 வரை  ஜமாபந்தி- Dinamani

சுடச்சுட

    

    நிலக்கோட்டை வட்டாச்சியர் அலுவலகத்தில் வரும் ஜூன்  8 ஆம் தேதி முதல் ஜூன் 16 வரை ஜமாபந்தி நடைபெறும் என வட்டாச்சியர் காளிமுத்து தெரிவித்தார்.
      இது குறித்து அவர் தெரிவித்தது: ஜூன் 8- நிலக்கோட்டை, கோட்டூர், நரியூத்து, பச்சமலையான் கோட்டை, கோடாங்கிபட்டி, நக்கலூத்தும், ஜூன் 9-  சிலுக்குவார்பட்டி, நூத்தலாபுரம், பங்களாபட்டி, சின்னமநாயக்கன்கோட்டை, பிள்ளையார்நத்தம், விளாம்பட்டி, எத்திலோடு, ஜூன் 12- முசுவனூத்து,கூவனூத்து, வீலிநாயக்கன்பட்டி, சிவஞானபுரம், போடியகவுண்டன்பட்டி, குல்லிசெட்டிபட்டி, சித்தர்கள்நத்தம், ஜூன் 13:  மாலையகவுண்டன்பட்டி, குல்லலக்குண்டு, கல்லடிப்பட்டி, ஜூன் 14 -ராமராஜபுரம், மட்டப்பாறை, ஜம்புதுரை கோட்டை, ஒருதட்டு, பள்ளபட்டி, வத்தலகுண்டு, சேவுகம்பட்டி, ஜூன் 15- வத்தலகுண்டு, கணவாய்பட்டி, மல்லனம்பட்டி, செங்கட்டாம்பட்டி,விருவீடு,செக்காபட்டி,விராலிப்பட்டி, ஜூன் 16- சந்தையூர், ரெங்கப்பநாயக்கன்பட்டி, நடக்கோட்டை, குன்னுவராயன்கோட்டை, பண்ணப்பட்டி, விராலிப்பட்டி, விருவீடு ஆகிய பகுதிகளுக்கான ஜமா பந்தி நடைபெற உள்ளது. மேற்குறிப்பிட்ட தேதிகளில் குறிப்பிட்ட கிராம  பொதுமக்கள் கலந்து கொண்டு, பட்டா மாறுதல், ரேஷன் கார்டு, வருமான வரி சான்றிதழ் மற்றும் வாரிசுச் சான்றிதழ்கள் கோரி மனுக்களை கொடுத்து பயன்பெறலாம். முதியோர் உதவித்தொகை இனி வரும் காலங்களில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வழங்கப்பட உள்ளதால் வங்கிகளில் சேமிப்பு கணக்கு இல்லாதவர்கள் வரும் ஜூன் 31 க்குள் வங்கியில் கணக்கை தொடங்க வேண்டும் என வட்டாட்சியர் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai