Enable Javscript for better performance
அரசு கலைக் கல்லூரி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடங்கியது- Dinamani

சுடச்சுட

    

    அரசு கலைக் கல்லூரி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடங்கியது

    By kirthika  |   Published on : 03rd June 2016 07:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை அரசுக் கலைக் கல்லூரியில் முதலாமாண்டு இளங்கலை படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வியாழக்கிழமை தொடங்கியது.
    கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் இளநிலை பட்டப் படிப்பில் 21 கலை, அறிவியல் பாடப் பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரியில் இரண்டு ஷிப்டுகளிலும் சேர்த்து மொத்தம் சுமார் 1,350 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
    இந்நிலையில், 2016-17 ஆம் கல்வியாண்டில் இளநிலை பட்டப் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்ப விநியோகம் கடந்த மே 11-ஆம் தேதி தொடங்கியது. கடந்த மாதம் 27-ஆம் தேதி வரை விண்ணப்ப விநியோகம் நடைபெற்றது. இதையடுத்து மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் மே 30-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த நிலையில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வியாழக்கிழமை தொடங்கியது. முதல் நாளில் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கான சேர்க்கை நடைபெற்றது.
    கல்லூரி முதல்வர் ஜெயலட்சுமி தலைமையில், கலந்தாய்வு ஒருங்கிணைப்பாளர் ராபர்ட், பேராசிரியர்கள் தமிழ்மணி, வீரமணி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்தக் கலந்தாய்வில், விளையாட்டு வீரர்களுக்கான பிரிவில் 29 ஆண்கள், 12 பெண்கள் என 41 பேரும், என்.சி.சி. பிரிவில் ஒருவரும், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் 4 பேரும், மாற்றுத் திறனாளிகள் 17 பேரும் என மொத்தம் 63 பேர் முதல் நாளில் பாடப் பிரிவுகளைத் தேர்வு செய்தனர்.
    இதையடுத்து பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. முதல் நாளில் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப் பாடங்களுக்காக தலா 550 மாணவர்களும், இதர பாடங்களுக்காக 600 மாணவர்களும் தரவரிசைப் பட்டியலின் அடிப்படையில் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
    இந்தக் கலந்தாய்வு வரும் 14-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தக் கலந்தாய்வின் முடிவில் காலியிடம் இருந்தால் இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்கான தேதி, விவரங்கள் ஜூன் 20-ஆம் தேதி வெளியிடப்படும் என்று கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai