Enable Javscript for better performance
ராமநாதபுரத்தில் 423 கான்கிரீட் வீடுகள் கட்ட பயனாளிகள் தேர்வு- Dinamani

சுடச்சுட

    

    ராமநாதபுரத்தில் 423 கான்கிரீட் வீடுகள் கட்ட பயனாளிகள் தேர்வு

    By kirthika  |   Published on : 04th June 2016 01:07 AM  |   அ+அ அ-   |    |  

    ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் 167 கான்கிரீட் வீடுகளும், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 256 கான்கிரீட் குடியிருப்புகளுமாக 423 குடியிருப்புகளுக்கு பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
    ராமநாதபுரம் அருகே பட்டினம் காத்தான் ஊராட்சியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் இது குறித்து மேலும் கூறியது:
    ராமநாதபுரம் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் மூலம் இந்திரா நகர் பகுதியில் 350.70லட்சம் மதிப்பில் 167 கான்கிரீட் குடியிருப்புகளுக்கு பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பட்டினம் காத்தான் ஊராட்சிப் பகுதியில் 98, பாம்பூரணியில் 76, பெரியார் நகரில் 37, மதுரைவீரன் சுவாமி கோயில் தெரு பகுதியில் 45 கான்கிரீட் வீடுகள் என 256 வீடுகள் உள்பட மாவட்டத்தில் மொத்தம் 423 கான்கிரீட் வீடுகள் கட்ட அனுமதி பெறப்பட்டு பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
    ஆட்சேபகரமான அரசு நிலங்களில் (நீர்நிலைப் புறம்போக்குகள் உள்ளிட்ட பகுதிகளில்) வசித்து வரும் குடிசைவாழ் மக்களை மறுகுடியமர்வு செய்ய இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு குடியிருப்பும் 390 சதுர அடி பரப்பளவில் ரூ.8.25 லட்சம் மதிப்பில் கட்டப்படவுள்ளது. இதில் 50 சதவிகிதம் மத்திய அரசு மானியமாகவும், 40சதவிகிதம் மாநில அரசு மானியமாகவும் வழங்கும். மீதம் உள்ள 10 சதவிகிதம் பயனாளிகள் பங்குத் தொகையாகும்.
    இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள பயனாளிகள் தங்களது பங்குத்தொகையாக ரூ.82, 500-ஐ காலதாமதமின்றி செலுத்திட வேண்டும். தேர்வு செய்யப்பட்டுள்ள அனைத்து பயனாளிகளுக்கும் குடியிருப்புகள் கட்டுவதற்கான பணி உத்தரவுகளை வழங்குவதற்கான பணிகளும் வேகமாக நடந்து வருகின்றன என ஆட்சியர் எஸ்.நடராஜன் தெரிவித்தார்.
    ஆட்சியருடன் குடிசைமாற்று வாரிய மதுரைக் கோட்ட நிர்வாகப் பொறியாளர் ந.பாண்டியராஜன், உதவி செயற்பொறியாளர் அசோகன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் குருதிவேல்மாறன், ராமநாதபுரம் கோட்டாட்சியர்(பொறுப்பு)ராஜசேகரன், ராமநாதபுரம் நகராட்சி ஆணையாளர் எஸ்.முகம்மது சிராஜ் உள்பட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp