சிவகங்கை மாவட்டத்தில் கருணாநிதி பிறந்தநாள்
By kirthika | Published on : 04th June 2016 01:08 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி, திருப்புவனம், சிங்கம்புணரி பகுதிகளில் வெள்ளிக்கிழமை திமுக தலைவர் கருணாநிதி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திமுகவினர் நலத்திட்ட உதவிகள் வழங்கி, பள்ளியில் மரக்கன்றுகளை நட்டனர்.
இளையான்குடி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் செந்தமிழ்நகர், மாதவன்நகர், கண்ணமங்கலம் ஆகிய இடங்களில் திமுக கொடியேற்றி வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. தாயமங்கலத்தில் பொதுமக்களுக்கு உணவு பரிமாறப்பட்டது. என்.புக்குளி கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள், எழுதுபொருள்கள் வழங்கப்பட்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு திமுக மேற்கு ஒன்றியச் செயலர் சுப.மதியரசன் தலைமை வகித்தார். கட்சியின் மாவட்ட பிரதிநிதிகள் அய்யாச்சாமி, செல்லச்சாமி, ஒன்றிய நிர்வாகிகள் சேகர், காளிமுத்து, மலைமேகு, தொண்டரணி புலிக்குட்டி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருப்புவனம்:திருப்புவனத்தில் கிழக்கு, மேற்கு ஒன்றியம் மற்றும் நகர் கழக திமுக சார்பில் நடந்த கருணாநிதி பிறந்தநாள் விழாவுக்கு திமுக மாவட்ட துணைச் செயலர் சேங்கைமாறன் தலைமை தாங்கி ஏழைப் பெண்களுக்கு இலவச சேலைகள் வழங்கிப் பேசினார். மேலும் கட்சி கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. திமுக ஒன்றியச் செயலர்கள் வசந்தி சேங்கைமாறன், கடம்பசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர்ச் செயலர் நாகூர்கனி, மாவட்ட பிரதிநிதிகள் முத்துராமலிங்கம், பிச்சைமணி, ராமலிங்கம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பொற்கோ, இலக்கிய அணி ஆதிபகவான், ஒன்றிய நிர்வாகிகள் ரவி, சக்திமுருகன், சுப்பிரமணியன், போஸ் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் ஒன்றிய, நகர திமுக சார்பில் அக்கட்சியின் தலைவர் கருணாநிதி பிறந்தநாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
சிங்கம்புணரி சீரணி அரங்கத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு வந்த திமுகவினர் பேருந்து நிலையம் முன்புள்ள அண்ணா சிலைக்கு, ஒன்றியச் செயலர் பூமணி, நகரச் செயலர் எம்.எஸ்.யாகூப் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர்கள் அம்பலமுத்து, சோமசுந்தரம், ஒன்றிய துணைச் செயலர் சிவபுரி சேகர், பேரூராட்சி கவுன்சிலர்கள் லோகநாதன், செந்தில்கிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி திருமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.