Enable Javscript for better performance
வருவாய் தீர்வாயத்தில் 1,319 பேர் மனு- Dinamani

சுடச்சுட

    

    வருவாய் தீர்வாயத்தில் 1,319 பேர் மனு

    By kirthika  |   Published on : 04th June 2016 01:05 AM  |   அ+அ அ-   |    |  

    தேனி மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில்(ஜமாபந்தி) 1,319 பேர் மனு அளித்தனர்.
    மாவட்டத்தில் கடந்த ஜூன் 1 தொடங்கி 9-ஆம் தேதி வரை மாவட்ட நிர்வாகம் சார்பில் வருவாய் தீர்வாயம் நடைபெறுகிறது.  தேனி வட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து மொத்தம் 139 பேர் மனு அளித்தனர்.
    போடி வட்டாட்சியர் அலுவலகத்தில் 400 பேர், ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் 115 பேர், உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 461 பேர், பெரியகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 226 பேர் உள்பட மொத்தம் 1,319 பேர் கோரிக்கை மனுக்கள் அளித்தனர்.     ஜூன் 7-ம் தேதி பெரியகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஏ.காமாட்சிபுரம், எண்டப்புளி, ஏ.புதுக்கோட்டை, தாமரைக்குளம், வடவீரநாயக்கன்பட்டி ஆகிய கிராமங்களுக்கும், உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அனுமந்தன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, காமயகவுண்டன்பட்டி, குச்சனூர், புலிகுத்தி, மார்க்கையன்கோட்டை ஆகிய கிராமங்களுக்கும் வருவாய் தீர்வாயம் நடைபெறுகிறது. ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் கோத்தலூத்து, கொத்தபட்டி, ராஜதானி, பழையகோட்டை, ராமகிருஷ்ணாபுரம், பாலக்கோம்பை, தெப்பம்பட்டி, சித்தார்பட்டி, கணவாய்பட்டி ஆகிய கிராமங்களுக்கும், போட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் கொட்டகுடி, போடி வடக்குமலை, அகமலை ஆகிய கிராமங்களுக்கும் வருவாய் தீர்வாயம் நடைபெறுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai