சுடச்சுட

  

  ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கோயில் திருவிழாவில் அனுமதியின்றி ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த 9 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

  மம்சாபுரம் இடையன்குளத்தில் காளியம்மன்கோயில் உள்ளது. இக்கோயில் திருவிழாவை முன்னிட்டு பெ.கதிரேசன் என்பவர் சார்பில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரப்பட்டது. ஆனால், ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்தினால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று கூறி, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவை மேற்கோள்காட்டி போலீஸார் அனுமதி மறுத்தனர்.

  இந்நிலையில், போலீஸார் அனுமதி மறுத்ததை மீறி அங்கு மேடை அமைத்து ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த கலைஞர்களை வரவழைத்து இருந்தனராம். மேலும், நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி வியாழக்கிழமை அதிகாலை சாலை மறியலிலும் ஈடுபட்டுள்ளனர்.

  இதையடுத்து, கிராமத்தைச் சுற்றிலும் மாற்று சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இருப்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மம்சாபுரம் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளர் கே.விஜி புகார் அளித்தார்.

  இதன் பேரில், பெ.கதிரேசன், பெ.பாலகிருஷ்ணன், அ.மயில்ராஜ், சி.முத்துக்குமார், பா.ஆனந்த், பா.முரளி, ரா.போஸ், வேலு, கா.கருப்பசாமி ஆகிய 9 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai