சுடச்சுட

  

  குமரி மாவட்ட மலையோரப் பகுதிகளில் தொடர் மழையால் சாலைகள் சேதம்

  By dn  |   Published on : 13th June 2016 11:14 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  குமரி மாவட்டத்தில் தொடர் மழையால் மலையோரப் பகுதிகளில் சுமார் 100 கி.மீ. தொலைவுக்கு சாலைகள் சேதமடைந்துள்ளன.
  மாவட்டத்தில் மலையோரப் பகுதிகளில் மழைக்கு முன்னதாக பிரதானமான மாநில நெடுஞ்சாலைகள் உள்பட பல சாலைகள் சேதமடைந்து காணப்பட்டன. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக தொடர்மழை பெய்து வருவதால் அவை மேலும் சேதமடைந்து விபத்தை ஏற்படுத்தும் வகையில் மாறியுள்ளன.
  குறிப்பாக குலசேகரம்-திற்பரப்பு சாலை, குலசேகரம்-திருவட்டாறு சாலை, தக்கலை-குலசேகரம் சாலை, சித்திரங்கோடு-சுவாமியார்மடம் சாலை, குலசேகரம்-பேச்சிப்பாறை சாலை, உத்திரங்கோடு-முக்கூட்டுகல் சாலை, அருமனை-குரூர் சாலை, அருமனை-குழிச்சல் சாலை, அருமனை-கொக்கஞ்சி உள்ளிட்ட பல சாலைகள் வாகனங்கள் செல்லமுடியாத அளவுக்கு சேதமடைந்துள்ளன.
  சாலைகளில் மழை நீர் தேங்குவதும், மழை வெள்ளத்தால் சாலைகள் அரித்துச் செல்லப்படுவதுமே சாலைகள் சேதமடைய காரணம் எனவும், உள்ளாட்சி நிர்வாகங்கள் வடிகால்களை முறையாக தூர்வாராமல் உள்ளதால், சாலைகள் வழியாக மழை நீர் பாய்ந்து சாலைகள் சேதமடைகின்றன  என வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.
  எனவே, உள்ளாட்சி அமைப்புகளும், நெடுஞ்சாலைத் துறையும் போர்க்கால அடிப்படையில் வடிகால்களை சுத்தம் செய்யவும், சாலைகளை தாற்காலிக மற்றும் நிரந்தர சீரமைப்பு செய்யவும் முன்வர வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  கருங்கல்:   தொடர்மழையால் கருங்கல் பேருந்து நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளான ராஜீவ் சந்திப்பு, பேருந்து நிலைய நுழைவுவாயில், ஆட்டோ நிலையம், அஞ்சல் நிலையம், கருமாவிளை, அணஞ்சிகோடு, கூனாலுமூடு ஆகிய சந்திப்புகளில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. 
  மேலும், கருங்கல் -தேங்காய்ப்பட்டினம், கருங்கல் -மார்த்தாண்டம், கருங்கல் -குளச்சல் உள்ளிட்ட சாலைகளும் குண்டும் குழியுமாக, போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் காணப்படுகின்றன. 
  இதனால் பாதசாரிகள், மாணவர்கள், பொதுமக்கள், உள்ளிட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai