Enable Javscript for better performance
பெண்கள், இளைஞர்கள் தொழில் கடன்கள் பெற வாய்ப்பு- Dinamani

சுடச்சுட

    

    பெண்கள், இளைஞர்கள் தொழில் கடன்கள் பெற வாய்ப்பு

    By kirthika  |   Published on : 02nd June 2016 08:38 AM  |   அ+அ அ-   |    |  

    தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் பெண்கள், இளைஞர்கள் தொழில்கடன்களைப் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இதுதொடர்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
    தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் (பஅஆஇஉஈஇஞ) மூலமாக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவர்களின் பொருளாதாரம் மேம்படும் வகையில் தொழில் புரிய கடன்கள் வழங்கப்படுகின்றன.
    அதன்படி பொது காலக்கடன் திட்டம், தனிநபர் கடன் திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சமும் (3 முதல் 5 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்த வேண்டும்), பெண்களுக்கான புதிய பொற்காலத் திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சமும் (3 ஆண்டுகள்), மகிளா சம்ரிதி யோஜனா திட்டத்தின் கீழ் பெண்கள் சுயஉதவிக்குழுவினர் ரூ.50 ஆயிரமும் (3 ஆண்டுகள்), சிறுகடன் திட்டத்தின் கீழ் ஆண்கள் சுயஉதவிக்குழுவினர் ரூ.50 ஆயிரமும் (3 ஆண்டுகள்) பெறலாம்.
    போக்குவரத்து இனங்களான கார், வேன், மினிவேன், டிராக்டர், டிரெய்லர் போன்றவை வாங்க ரூ.3.13 லட்சமும் (5 ஆண்டுகள்), கறவை மாடுகள் வாங்க ரூ.60 ஆயிரமும் (3 ஆண்டுகள்) கடன் வழங்கப்படுகிறது.
    கடன்பெற விரும்புவோர் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் கிராமப்புறமாக இருந்தால் ரூ.98 ஆயிரத்துக்கும், நகர்ப்புறமாக இருந்தால் ரூ.1.20 லட்சத்துக்கும் மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 60 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.
    ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். சுயஉதவிக்குழுக்கள் தொடங்கி 6 மாதங்கள் பூர்த்தியாகி இருக்க வேண்டும். திட்ட அலுவலரால் (மகளிர் திட்டம்) தரம் செய்யப்பட்டிருக்க வேண்டும். டாப்செட்கோ கடன்களுக்கான விண்ணப்பங்களை கூட்டுறவுச் சங்கங்களிலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகங்களிலும் பெற்று பூர்த்தி செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இம்மாதம் 30 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம்.
    பெறப்பட்ட விண்ணப்பங்கள் தேர்வுக்குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டு பின்னர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கழகம் (ஆவின்) மூலமாக கடன் வழங்கப்படும் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    kattana sevai