Enable Javscript for better performance
தூத்துக்குடி பக்கிள் ஓடையில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடி பக்கிள் ஓடையில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்

    By kirthika  |   Published on : 04th June 2016 01:12 AM  |   அ+அ அ-   |    |  

    தூத்துக்குடி, ஜூன் 3:  தூத்துக்குடி பக்கிள் ஓடையில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் செடிகளை அகற்றும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
    தூத்துக்குடி மாநகரப் பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பக்கிள் ஓடை மூலம் கடலில் சென்று கலக்கிறது. இதேபோல, மழைக் காலங்களில் வெள்ளநீர் தூத்துக்குடி 3 ஆம் மைல் பகுதி முதல் திரேஸ்புரம் வரை உள்ள பக்கிள் ஓடை வழியாக கடலுக்குச் செல்கிறது.
    இந்நிலையில், பக்கிள் ஓடையில் மணல் திட்டுக்களும், பிளாஸ்டிக் கழிவுகளும் குவிந்து காணப்பட்டன. அமலைச் செடிகளும் அதிகளவு மண்டிக்கிடப்பதால் கழிவுநீர் செல்ல முடியாத நிலை நீடித்தது. இதையெடுத்து, பக்கிள் ஓடையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
    அதன்பேரில், 3 ஆம் மைல் முதல் திரேஸ்புரம் வரை உள்ள பக்கிள் ஓடையில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளையும், அமலைச் செடிகளையும் அகற்றுவதற்கு மேயர் ஏ.பி.ஆர். அந்தோணி கிரேஸ் உத்தரவிட்டார்.
    மேலும், இதற்கானப் பணிகளை அவர் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்து பார்வையிட்டார். பிளாஸ்டிக் கழிவுகளை முழுமையாக அகற்றி, கழிவுநீர் தேங்காதபடி பணியை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத் தினார்.
    அப்போது, சுகாதார ஆய்வாளர் ஸ்டாலின் பாக்கியநாதன், மேயரின் நேர்முக உதவியாளர் துரைமணி மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai