Enable Javscript for better performance
சாத்தான்குளம், தட்டார்மடம் காவல் நிலையத்தில் எஸ்.பி. ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    சாத்தான்குளம், தட்டார்மடம் காவல் நிலையத்தில் எஸ்.பி. ஆய்வு

    By kirthika  |   Published on : 02nd June 2016 08:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சாத்தான்குளம், தட்டார்மடம் காவல் நிலையங்களில் மாவட்ட எஸ்.பி. அஸ்வின் கோட்னீல் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
    சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு வந்த அவர், காவல் நிலைய கோப்புகள் மற்றும் காவலர்களின் பணி விவரங்கள் ஆகியன குறித்து ஆய்வு செய்தார். பின்னர் காவலர்களின் நன்னடத்தை குறித்து விசாரணை நடத்தினார்.
    அப்போது அவரிடம் வியாபாரிகள் சங்கத் தலைவர் ஸ்டாலின், செயலர் ரவி, உறுப்பினர் ஸ்ரீதர் ஆகியோர் பேய்க்குளம் பஜாரில் காவல் உதவி மையம் அமைக்க வேண்டும் என எஸ்.பி.யிடம் முறையிட்டனர்.
    பின்னர் சாத்தான்குளம் வியாபாரிகள் சங்கத்தைச் சேர்ந்த சங்கர், ஜெயராஜேஷ், பேரூராட்சி கவுன்சிலர் ஜோசப் அலெக்ஸ்,  பிச்சிவிளை சுதாகர் உள்ளிட்ட பலர் சந்தித்து, சாத்தான்குளம் பேரூராட்சி பகுதியில் உள்ள முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை  எடுக்க வேண்டும் என முறையிட்டனர்.
    தொடர்ந்து எஸ்.பி. காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டார். அப்போது சாத்தான்குளம் டி.எஸ்.பி. கண்ணன், ஆய்வாளர் செல்வக்குமார், உதவி ஆய்வாளர்கள் மீனா, எழிலரசன், தனிப் பிரிவு காவலர் ஹரிதாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
    பின்னர், தட்டார்மடம் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட எஸ்.பி. காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டார். அப்போது டி.எஸ்.பி., காவல் ஆய்வாளர் பொன்னுசாமி, உதவி ஆய்வாளர் சங்கர், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ஆறுமுகபெருமாள், ராமச்சந்திரன், தனிப் பிரிவு காவலர் ஜோஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai