சுடச்சுட

    

    ஜயங்கொண்டத்தை அடுத்த இலையூர் கிராமத்திலுள்ள செல்லியம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வியாழக்கிழமை இரவு அப்பகுதியைச் சேர்ந்த பாபு என்பவரின் தோப்பில் இலையூர் கண்டியங்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த கலியமூர்த்தி மகன் ஆசைத்தம்பி, அவரது அக்கா மகன் விக்னேஷ் (எ) சத்தியசீலன் ஆகியோர் தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தாராம். அப்போது அங்கு வந்த மேலவெளியைச் சேர்ந்த கண்ணு (எ) பொன்னுசாமி மகன் வினோத் என்பவர் தனது இரு சக்கர வாகனத்தின் ஆக்சிலேட்டரை தொடர்ந்து வேகமாக திருகிக் கொண்டிருந்தார். இதுதொடர்பாக சத்தியசீலனுக்கும், வினோத்துக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அவர்களை சமதானம் செய்ய முயன்ற ஆசைத்தம்பியை, வினோத் தான் வைத்திருந்த கத்தியால் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ஆசைதம்பி ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஜயங்கொண்டம் போலீஸார் வினோத்தை வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai