Enable Javscript for better performance
ரூ. 20 லட்சம் மோசடி : நடவடிக்கை கோரி காவல் நிலையம் முற்றுகை- Dinamani

சுடச்சுட

    

    ரூ. 20 லட்சம் மோசடி : நடவடிக்கை கோரி காவல் நிலையம் முற்றுகை

    By kirthika  |   Published on : 03rd June 2016 01:50 AM  |   அ+அ அ-   |    |  

    வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளைஞர்களிடம் ரூ. 20 லட்சம் மோசடியில் ஈடுபட்ட தனியார் டிராவல்ஸ் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட இளைஞர்கள் பெரம்பலூர் காவல் நிலையத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனர்.

    பெரம்பலூர் புறநகர்ப் பகுதியான துறைமங்கலத்தில் தனியார் டிராவல்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் சார்பில் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இளைஞர்களுக்கு குறைந்த செலவில் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி போஸ்டர்கள் ஒட்டப்பட்டனவாம்.

    அதனடிப்படையில், மேற்கண்ட மாவட்டங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வெளிநாட்டிற்கு செல்ல வேண்டுமென அந்த நிறுவனத்தை அணுகி சுமார் 20 லட்சத்துக்கும் அதிகமாகப் பணம் செலுத்தினராம்.

    இந்நிலையில் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பணம் செலுத்திய இளைஞர்களுக்கு கடந்த 31 ஆம் தேதி விமானப் பயணம் எனக் கூறியிருந்த டிராவல்ஸ் நிறுவனத்தின் தொடர்புகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டன.

    இதையடுத்து, 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் துறைமங்கலத்தில் உள்ள டிராவல்ஸ் நிறுவனத்துக்கு வியாழக்கிழமை வந்து பார்த்தபோது, அந்த அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது. தொடர்ந்து, வெளிநாடுகளுக்கு செல்வதற்காக பணம் செலுத்திப் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் சம்பந்தப்பட்ட டிராவல்ஸ் நிறுவனம் மற்றும் பெரம்பலூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

    இதையடுத்து, சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தின் மீது நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியும், தாங்கள் செலுத்திய தொகையை திரும்பப் பெற்றுத்தரக் கோரியும் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் பெரம்பலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai