Enable Javscript for better performance
"தாய்மொழி வழிக் கல்வி திறனாளிகளை உருவாக்கும்"- Dinamani

சுடச்சுட

    

    "தாய்மொழி வழிக் கல்வி திறனாளிகளை உருவாக்கும்"

    By dn  |   Published on : 16th June 2016 01:51 PM  |   அ+அ அ-   |    |  

    கந்தர்வகோட்டை: கந்தர்வகோட்டை அம்பாள் திருமண மண்டபத்தில் படைப்பாற்றல் திறன்மிக்க விஞ்ஞானிகளையும் சிந்தனையாளர்களையும் உருவாக்கிட தாய்மொழி வழிக்கல்விக்கல்வி அவசியம் என கல்வி விழிப்புணர்வு திறனாய்வுக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை வலியுறுத்தப்பட்டது.  
    இவ்விவாதக் கூட்டத்தில் பஞ்சாபி எழுத்தாளர் ஜோகா சிங் எழுதி கண. குறிஞ்சி அவர்களால் தமிழாக்கம் செய்யப்பட்ட மொழிச் சிக்கல்கள் குறித்த சர்வதேச கருத்து மற்றும் ஆசிரியர் நலங்கிள்ளி எழுதி வெளிவந்த ஓ கல்வியில் தாழ்ந்த தமிழகமே ஆகிய இரு நூல்கள் மீது கற்க கசடற கல்வி இயக்க அமைப்பாளர் தோழர் பாரி தலைமையில் திறனாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
    கூட்டத்தை தொடங்கி வைத்து ஆசிரியர் ஆ. மணிகண்டன், நூலாசிரியர்களை அறிமுகம் செய்து சீ.அ. மணிகண்டன் ஆகியோர் பேசினர். சர்வதேச மொழிச் சிக்கல்கள் குறித்து பேராசிரியர் தா. மணி பேசியபோது தற்போதைய கல்வி முறையின்படி மாணவர்கள் மனப்பாடம் செய்து கற்பதும் தாய்மொழியல்லாத பிற மொழிகளை முதன்மைப்பாடமாகக் கற்பதும் சுய சார்பான சிந்தனையை மழுங்கடித்து விடுவதோடு புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க இயலாத சமூகத்தை உருவாக்கிவிடும் என்றார்.
    புத்தக ஆசிரியர் தோழர் நலங்கிள்ளி பேசியபோது சமீபமாக வெளியிடப்பட்ட சர்வதேச கல்வி நிலை குறித்த பிசா அறிக்கை மற்றும் அசர் அறிக்கைகளில் தமிழக மாணவர்களின் பின்னடைவுக்குக் காரணமாக அமைவது பாடத்திட்டத்தில் உள்ள குறைகளும் மனப்பாடக் கற்றலுமே என்ற அவர், இந்நிலை மாற மத்திய, மாநில அரசுகள் இணைந்து பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் தாய்மொழி வழியிலான கல்வியை கற்பிப்பது அவசியம் என வலியுறுத்தினார்.
    இந்த ஆய்வரங்கத்தில் தஞ்சாவூர் சரபோஜி அரசுக்கல்லூரிப் பேராசிரியர் வி. பாரி, கவிஞர் ராஜேந்திரன், வழக்குரைஞர்கள் ச. பாலமுருகன், ஜெயந்தன், பாவேந்தர் மாமன்றத் தலைவர் ஆபத்சகாயம், பாரத் ரோட்டரி சங்கத் தலைவர் கே. நரேந்திரன், எழுத்தாளர்கள் உத்தம்சிங், அண்டனூர் சுரா, பழ. ஆசைத்தம்பி, ஆசிரியர் சக்திவேல், விதைக்கலாம் பசுமை இயக்க நிறுவனர்கள் கஸ்தூரி ரெங்கன், மலையப்பன் சமூக ஆர்வலர் வேலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai