Enable Javscript for better performance
திருவாரூர் மாவட்டத்தில் ஜூன் 3 முதல் ஜமாபந்தி தொடங்குகிறது- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூர் மாவட்டத்தில் ஜூன் 3 முதல் ஜமாபந்தி தொடங்குகிறது

    By kirthika  |   Published on : 28th May 2016 06:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் மாவட்டத்தில் ஜூன்.3-ம் தேதி முதல் ஜமாபந்தி நடைபெற வுள்ளது எனத் தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவாரூர் வட்டத்தில் ஜூன்.3 முதல் 9-ம் தேதி வரை ஆட்சியர் எம். மதிவாணன் தலைமையில், திருத்துறைப்பூண்டி வட்டத்தில் ஜூன்.3 முதல் 15-ம் தேதி வரை வரை மாவட்ட வருவாய் அலுவலா் த. மோகன்ராஜ் தலைமையில், நன்னிலம் வட்டத்தில் ஜூன்.3 முதல் 15-ம் தேதி வரை கோட்டாட்சியர் இரா. முத்துமீனாட்சி தலைமையில், மன்னார்குடி வட்டத்தில் ஜூன்.3 முதல் 23-ம் தேதி வரை கோட்டாட்சியர் செல்வசுரபி தலைமையில், நீடாமங்கலம் வட்டத்தில் ஜூன் 3 முதல் 14-ம் தேதி வரை மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடி யினா் நல அலுவலா் தலைமையில், வலங்கைமான் வட்டத்தில் ஜூன் 3 முதல் 15-ம் தேதி வரை மாவட்ட வழங்கல் அலுவலா் தலைமையில், குடவாசல் வட்டத்தில் ஜூன் 3 முதல் 21-ம் தேதி வரை உதவி ஆணையா் (கலால்) தலைமையில் ஜமாபந்தி நடைபெறவுள்ளது.

    மேலும் அரசு விடுமுறை நாட்கள் (சனி, ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை நீங்கலாக   நாள்தோறும் காலை 9 மணிக்கு அந்தந்த இடத்தில் ஜமாபந்தி தொடங்கப்படும். எனவே  மக்கள் சம்பந்தப்பட்ட வட்ட அலுவலகங்களில் நேரில் சென்று தங்களது கோரிக்கை மனுவை அளித்து பயன்பெறலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai