சுடச்சுட

  

  மாணவி பலாத்காரம்: ஊர் தலைவரை கைது செய்யக் கோரி எஸ்.பி. அலுவலகம் முற்றுகை

  By dn  |   Published on : 16th June 2016 01:38 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருச்சி: திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை அடுத்த ஆலத்தூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் 17 வயது மகள். திருச்சி பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.
  மாணவியின் குடும்பத்துடன் நெருங்கி பழகிய ஆலத்தூர் கிராமத் தலைவரான வைரம் (45), கடந்த 7 மாதத்துக்கு முன்பு மாணவிக்கு மயக்க மாத்திரை கொடுத்து, அவரை பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த மாணவி கர்ப்பமடைந்தாராம்.
  இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரை திருவெறும்பூர் மகளிர் காவல் நிலையத்தினர் வாங்க மறுத்ததாகக் கூறப்படுகிறது.  இதனிடையே, தன் மீது பொய்ப் புகார் கூறுவதாக வைரம் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீஸார் மாணவியையும், அவரது தாயையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததை அறிந்த ஆலத்தூர் மக்கள் திருவெறும்பூர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர்.
  இதைத்தொடர்ந்து போலீஸார், வைரத்தின் மீது வழக்குப் பதிந்து, அவரைத் தேடி வந்தனர். இந்நிலையில் ஆலத்தூர் பகுதியைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர், ஊர்த்தலைவர் வைரத்தை கைது செய்ய வலியுறுத்தி திருச்சி எஸ்.பி. அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனர்.
  அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய எஸ்.பி. நிஷா பார்த்திபன் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai