சுடச்சுட

    

    கல்வியில் மாவட்டத்தை முன்னேற்ற குடியிருப்போர் சங்கம் வலியுறுத்தல்

    By kirthika  |   Published on : 04th June 2016 07:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடலூர் மாவட்டத்தை கல்வியில் முன்னேறிய மாவட்டமாக்க தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டுமென கடலூர் அனைத்து குடியிருப்போர் நலச் சங்க கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
    இதுகுறித்து அக்கூட்டமைப்பு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தமிழகத்தில் 6ஆவது முறையாக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கும், அமைச்சர் எம்.சி.சம்பத்துக்கும் பாராட்டு தெரிவிக்கிறோம். மேலும், மாவட்டத்தில் நிலவும் பிரச்னைகளை தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
     கல்வியில் பின்தங்கியுள்ள கடலூர் மாவட்டத்தை முன்னேற்ற நடவடிக்கை தேவை. நிலத்தடி நீர் மாசுபடுவதை விஞ்ஞான ரீதியாக தடுக்க வேண்டும். பாதுகாப்பான போக்குவரத்து உறுதிப்படுத்தப்பட வேண்டும். நிலத்தடி நீர் மேம்பாட்டுக்கு என்எல்சியிடமிருந்து நிதி பெற வேண்டும். சுற்றுச்சூழல் மேம்பாடு, சரவணாநகர் இணைப்புச் சாலை, செம்மண்டலத்தில் பல்லடுக்கு மேம்பாலம், நகரில் தேவையான இடங்களில் மேம்பாலம், மாற்று புறவழிச் சாலை பணிகளை துரிதப்படுத்துதல், கொள்ளிடம் கூட்டு குடிநீர்த் திட்டத்தை உடனடியாகப் பயன்பாட்டுக்குக் கொண்டு வருதல் உள்ளிட்ட கோரிக்கைகள் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளன.
     மேலும், அமைச்சர் எம்.சி.சம்பத் இப்பிரச்னைகளில் தலையிட்டு நீண்ட கால திட்டங்களை வகுக்க வேண்டுமெனவும் கூட்டமைப்பு சார்பில் பொதுச்செயலர் மு.மருதவாணன் உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai