சுடச்சுட

  
  vaithilingam


  புதுச்சேரி, ஜூன் 10: புதுச்சேரி மாநில சட்டப் பேரவைத் தலைவராக வைத்திலிங்கமும், துணைத் தலைவராக சிவக்கொழுந்தும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதை, பேரவைச் செயலர் மோகன்தாஸ் வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
  புதுச்சேரி சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சியைப் பிடித்தது. இதையடுத்து கடந்த 6-ஆம் தேதி முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.
  இதையடுத்து சட்டப் பேரவையின் தாற்காலிகத் தலைவராக வி.பி.சிவக்கொழுந்து நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் வியாழக்கிழமை புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்றுக்கொண்டனர்.
  இந்த நிலையில், பேரவைத் தலைவர் பதவிக்கு வி.வைத்திலிங்கமும், துணைத் தலைவர் பதவிக்கு வி.பி.சிவக்கொழுந்தும் பேரவைச் செயலர் மோகன்தாஸிடம் மனு தாக்கல் செய்தனர். பேரவைத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தலுக்கு வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணியுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது. வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
  சனிக்கிழமை காலை 11 மணிக்கு கூடும் சட்டப் பேரவைக் கூட்டத்தில் இருவரும் முறைப்படி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்படுவார்கள் என்று பேரவைச் செயலர் மோகன்தாஸ் தெரிவித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai