புதிய தார்ச் சாலை சேதம்: பராமரிப்புப் பணியை தடுத்து நிறுத்திய மக்கள்
By kirthika | Published on : 04th June 2016 07:17 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்தில், புதிதாக அமைக்கப்பட்ட தார்ச் சாலை இரு வாரங்களில் சேதமடைந்தது. இதனைக் கண்டித்து, சாலை பராமரிப்புப் பணிக்காக வந்தவர்களை கிராம மக்கள் வெள்ளிக்கிழமை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியம், மேட்டுக்குப்பம் கிராமத்திலிருந்து டி.கொளத்தூர் காலனி வரை சுமார் 4.5 கிமீ தூரம் தார்ச் சாலை அமைக்கப்பட்டது. ஆனால், இச்சாலை 15 தினங்களில் சேதமடைந்துவிட்டதாம்.
இந்நிலையில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் புதிய சாலையில் பராமரிப்புப் பணிக்கு (பேட்ஜ் ஒர்க்) ஆட்கள் அனுப்பப்பட்டனராம்.
ஆனால், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த ஒட்டனந்தல் கிராம மக்கள், மீண்டும் தரமான சாலை அமைத்துத்தர வேண்டும் எனக் கூறி பராமரிப்புப் பணியை தடுத்து நிறுத்தினர்.