கியூபாவின் தாற்காலிகத் தோல்வி

அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளின் பின்னால் செல்லாமல் அரசியல், பொருளாதாரத்தில் தங்களுக்கென்று தனிக் கொள்கைகளை வகுத்துக்கொண்டு தனித்துவத்தைப் பேணி காக்கும் நாடுகள் மிகச்சில. அவற்றில் ஒன்று கியூபா. அமெரிக்காவில் மிக அருகிலேயே இருந்து கொண்டு அவர்களை எதிர்ப்பது என்பது சாதாரண விஷயமல்ல.

அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளின் பின்னால் செல்லாமல் அரசியல், பொருளாதாரத்தில் தங்களுக்கென்று தனிக் கொள்கைகளை வகுத்துக்கொண்டு தனித்துவத்தைப் பேணி காக்கும் நாடுகள் மிகச்சில. அவற்றில் ஒன்று கியூபா. அமெரிக்காவில் மிக அருகிலேயே இருந்து கொண்டு அவர்களை எதிர்ப்பது என்பது சாதாரண விஷயமல்ல.

எந்த வகையிலும் அமெரிக்காவின் அதிகாரத்துக்கு உள்பட்டு விடக்கூடாது என்பது கியூபாவின் உறுதியான கொள்கை. இதற்காகவே இரட்டைச் செலாவணிமுறையை நடைமுறையில் வைத்துள்ளது அந்நாடு. உள்ளூர் மக்களின் பயன்பாட்டுக்கான பணம் கியூபன் பெùஸா, அதே நேரத்தில் சர்வதேச வர்த்தகம், கியூபா வரும் வெளிநாட்டுப் பயணிகளின் பயன்பாட்டுக்கானது மாற்றீட்டு பெùஸா (கன்வெர்டிபிள் பெùஸா).

கியூபாவின் தேசியச் செலாவணியான பெùஸாவை அந்நாட்டு மக்கள் பெருமளவில் பயன்படுத்துகிறார்கள். அதன் மதிப்பு குறைவு. அதே நேரத்தில் மாற்றீட்டு பெùஸாவின் மதிப்பு, ஏறக்குறைய அமெரிக்க டாலரின் மதிப்புக்கு இணையானது.

நாம் ஓர் அமெரிக்க டாலரை வாங்கி வைத்திருக்கும்போது, அமெரிக்க மத்திய வங்கி அதற்கு ஈடாக இன்னொரு டாலரை அச்சடித்து புழக்கத்தில் விடுகிறது. இதனால் அமெரிக்க டாலரின் மதிப்பு சர்வதேச அளவில் உயருகிறது. டாலர் சர்வதேச அளவில் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

இதனைத் தங்கள் நாட்டில் அனுமதிக்கக் கூடாது என்பதற்காகவே 2004ஆம் ஆண்டில் மாற்றீட்டு பெùஸா அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு "சாவிதோ' என்ற அதிகாரப்பூர்வமற்ற பெயரும் உண்டு.

அதே நேரத்தில் கியூப மக்கள் பயன்படுத்தும் பெùஸாவுக்கும், மாற்றீட்டு பெùஸாவுக்கும் இடையே உள்ள வேறுபாடு 24 மடங்காகும். அதாவது உள்ளூர் மக்கள் பயன்படுத்தும் பெùஸாவைவிட 24 மடங்கு அதிகம் மதிப்புடையது மாற்றீட்டு பெùஸா.

இதனால் முறைகேடுகளும், குழப்பங்களும் ஏற்படுவதைத் தடுக்க இப்பணத்தை வங்கிகளிலும், அதிகாரப்பூர்வ நாணய மாற்று மையங்களிலும்தான் மாற்ற முடியும் என்பது உறுதியாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

அமெரிக்க டாலரை கியூப நாணயமாக மாற்ற 10 சதவீத வரி கட்டாயம். அதே நேரத்தில் மற்ற நாட்டுப் பணத்தை மாற்றும்போது இந்த 10 சதவீத வரி கிடையாது. இதனால்தான் விவரம் தெரிந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கியூபா செல்லும்போது அமெரிக்க டாலரை யூரோ உள்ளிட்ட பிற நாட்டு கரன்ஸியாக மாற்றி எடுத்துச் செல்கின்றனர்.

இதேபோல அமெரிக்க வங்கிகள் அளிக்கும் கிரெடிட் கார்டுகளை கியூபாவில் பயன்படுத்த முடியாது. அமெரிக்கா ஆண்டாண்டு காலமாக கியூபா மீது விதித்துள்ள பொருளாதாரத் தடைக்கான பதிலடி நடவடிக்கைகள்தான் இவை.

சோவியத் யூனியன் சிதறுண்ட பிறகு வலுவான வர்த்தகக் கூட்டாளியின்றி தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில் கியூபாவின் பொருளாதாரம் வீழ்ச்சிப் பாதையில் சென்றது. உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச நிதியமைப்புகள் எதுவும் கியூபாவுக்கு உதவுவதில்லை.

அந்த இக்கட்டான சூழ்நிலையில் கம்யூனிஸத்தை கைவிடாமல், முதலாளித்துவத்துக்கும் சென்றுவிடாமல், சர்வதேச அளவில் கூட்டு வர்த்தக (ஜாயிண்ட் வென்சர்) திட்டத்துக்கு கியூபா ஒப்புக் கொண்டது.

இதையடுத்து அமெரிக்கா தவிர்த்த பிற ஐரோப்பிய நாடுகளின் நிறுவனங்கள் கியூபாவின் சுற்றுலாத்துறையில் முதலீடு செய்ய முன்வந்தன. சுற்றுலாப் பயணிகளுக்காக பிரம்மாண்டமான ஹோட்டல்கள் உள்ளிட்டவை கியூபாவில் நிறுவப்பட்டன.

இதில் அரசின் பங்கு 51 சதவீதம், அன்னிய நிறுவனங்களின் பங்கு 49 சதவீதம். கிடைக்கும் லாபமும் இதே விகிதத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்டன. இதுவும் குறிப்பிட்ட ஆண்டுகளுக்குத்தான். ஒப்பந்த ஆண்டுகாலம் முடிந்த பின்னர் அவை அரசுக்கு சொந்தமாகிவிடும்.

சர்க்கரை வர்த்தகம், உலகப் புகழ்பெற்ற ஹவானா சுருட்டின் ஏற்றுமதி உள்ளிட்டவையும் சரிந்த பொருளாதாரத்தைத் தூக்கிப்பிடித்தன.

நாட்டின் சமத்துவம் பேணப்பட வேண்டும் என்பதற்காக பிறரைவிட அதிகமாக சம்பாதிக்கும் வசதிபடைத்த வர்க்கம் உருவாகிவிடக் கூடாது என்பதில் அரசு எப்போதுமே கவனமாக உள்ளது. இதற்காகவே அன்னிய நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்குக் கொடுக்கும் சம்பளத்துக்கும் கூட உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக சம்பளம் வழங்கப்படுவது தெரிந்தால், அதனை அரசாங்கம் பிடித்து பொதுப் பயன்பாட்டுக்கு வழங்கிவிடும்.

ஆனால் கியூபாவில் இப்போது ஏற்பட்டுள்ள பணவீக்க உயர்வு, அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு, குறைவான சம்பளம் போன்ற காரணத்தால் பெரும்பாலான மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

மேலும், மாற்றுமதிப்பு குறைந்த பெùஸா பணத்தில் தங்கள் சம்பளம் இருப்பதை மக்கள் விரும்பவில்லை. டூத் பிரஷ் வாங்குவதற்குக் கூட அடித்தட்டு மக்கள் தங்கள் ஒருநாள் சம்பளத்தை அளிக்க வேண்டியுள்ளது.

பெùஸாவுக்கும், மாற்றீட்டு பெùஸாவுக்கும் உள்ள மதிப்பு வேறுபாடு வேகமாக அதிகரித்து வருவது குறித்து அதிபர் ரெüல் காஸ்ட்ரோ ஏற்கெனவே கவலை தெரிவித்துள்ளார். அமெரிக்க டாலருக்கு எதிரான போட்டியில் கியூபா வென்றுவிட்டாலும், உள்ளூர் மக்களிடம் தோல்வியைச் சந்தித்துள்ளது கியூபாவின் இரட்டைச் செலாவணி முறை. இப்பிரச்னையைத் தீர்க்க கியூபாவின் பொருளாதார நிபுணர்களும், வங்கித்துறை அதிகாரிகளும் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.

சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளும் வெவ்வேறுவிதமாக பொருளாதார சிக்கலைச் சந்தித்து வருகின்றனர். பிற நாடுகள் கைகொடுத்தும் கவலைக்கிடமாகவே உள்ள சில ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார நிலைமை இப்படியிருக்கும்போது எங்கள் நாட்டில் ஏற்பட்டிருப்பது சிறிய சிக்கல்தான். அமெரிக்கா விதித்திருக்கும் பல்வேறு பொருளாதாரத் தடைகளை வென்றுவிட்ட எங்கள் மக்களுடன் இணைந்து, இப்போது ஏற்பட்டுள்ள தாற்காலிக தோல்வியில் இருந்து மீள்வோம் என்பது கியூபா அரசின் விளக்கமாக இருக்கிறது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தை இவ்வளவு காலம் வெற்றிகரமாக எதிர்த்துவந்த கியூபா, இப்போது ஏற்பட்டுள்ள செலாவணி மாற்றுப் பிரச்னை மற்றும் பொருளாதார வீழ்ச்சியை எவ்விதம் எதிர்கொள்ளப்போகிறது, அதிலிருந்து எவ்விதம் மீண்டு வருகிறது என்பதே சர்வதேச நாடுகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

கியூபா மேற்கொள்ளும் உத்திகள் பிற நாடுகளுக்கும் பொருளாதார ரீதியில் முன்னுதாரணமாக இருக்கும் என்று நம்புவோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com