சுடச்சுட

  

  பொது ஊழியர்கள், அதாவது அரசாங்கத்தின் பொறுப்பில் உள்ளவர்கள் லஞ்சத்தைப் பணமாக வாங்கினாலும், வேறு வடிவில் பெற்றாலும் குற்றம்தான் என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள்.

  கார்ப்பரேட் செக்டார் என்ற சொல் இந்தியாவில் பூதாகரமான வடிவத்தைப் பெற்றிருக்கிறது. இந்த அமைப்புக்கு முதலீடு எப்படி வருகிறது?

  பொதுமக்கள் தங்கள் சேமிப்பை கம்பெனிப் பங்குகளில் போடுவது. கம்பெனிகளில் வைப்பு நிதியாக முதலீடு செய்வது. இதன் அளவு, கம்பெனியின் மொத்த முதலீட்டில் மூன்றில் ஒரு பங்குதான் இருக்கும்.

  மீதித் தேவைப்படும் மூன்றில் இரண்டு பங்கு எப்படி வருகிறது? கடன் வழங்கும் வங்கிகள் அல்லது நிதி உதவி செய்வதற்காகத் தொடங்கப் பட்டுள்ள நிறுவனங்கள் அந்த மீதி இரண்டு பங்கைக் கடனாகத் தருகின்றன.

  இப்படி கடன் வழங்கும் அமைப்புகள், கடன் பெறும் கம்பெனிகளின் சொத்தை அடமானமாக ஏற்றுக் கொண்டு வழங்குகின்றன. கம்பெனியின் சொத்து மட்டும் அல்லாமல் கம்பெனியைத் தொடங்கியவர்களின் சொத்துகளையும் அடமானமாகப் பெற்றுக் கொள்கின்றன.

  இதையும் தவிர, கம்பெனி நிர்வாகிகளிடம் கையொப்பமும் பெற்றுக் கொள்கின்றன. இதன் மூலம், கம்பெனி நிர்வாகிகளின் வாரிசுகளையும் அவை கட்டுப்படுத்துகின்றன.

  வட்டியை மாதாமாதமோ அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோ கட்ட வேண்டும். கடன் தொகையான அசல் தொகையை, கம்பெனி இயங்கத் தொடங்கியது முதல், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை திருப்பிக் கொடுக்க வேண்டும்.

  கம்பெனி தயாரிக்கும் பொருள் மக்களின் தேவைக்கேற்றவாறு இருந்தால் விற்பதில் சிரமம் இருக்காது. இதில் ஏதாவது ஓர் இடத்தில் கட்டுப்பாட்டை மீறிவிட்டால் சிக்கலின் முதல் வரி எழுதப்பட்டு விடும்.

  கடன் கொடுத்தவர்கள் ரிசர்வ் வங்கியின் விதிகளுக்கு உட்பட்டு கடன் வழங்கி, அதை வசூலித்து வர வேண்டும். கட்டுப்பாட்டில் தடம் புரண்டால் கம்பெனியின் கடையாணி கழன்று விட நேரும்.

  இதை வாராக் கடன் என்ற பட்டியலில் சேர்க்க வேண்டும். இதற்கு முதலில் ஆஹக் க்ங்க்ஷற்ள் என்று பெயர் வைத்தார்கள். எம்.பி.ஏ. அல்லது அமெரிக்கப் படிப்பு உள்ளவர்கள் சர்ய் டங்ழ்ச்ர்ழ்ம்ண்ய்ஞ் அள்ள்ங்ற்ள் என்று இதனைக் குறிப்பிட்டார்கள்.

  சிட்டி யூனியன் வங்கியின் நூற்றாண்டு விழா மிகவும் பரிவோடு தொடங்கப் பட்டது. அந்த வங்கியோடு தொடர்புள்ள அத்தனை பேருக்கும் அழைப்பு அனுப்பி விருந்து வைத்து சிறப்பாக விழாவை நடத்தினார்கள்.

  அந்த விழாவில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ஆர். வெங்கடராமன், BAD DEBTS-I Non Performing Assets  என்றுகூறுவது நியாயமல்ல' என்று கூறினார்.

  பல ஆண்டுகளுக்கு முன்னால் ஒருவர் கம்பெனி செலவில் தன் மகளின் திருமணத்தை நடத்தினர். தணிக்கையாளர் "இது சரியில்லையே' என்று கூறியபோது "எல்லாச் செலவுகளுக்கும் வவுச்சர் இருக்கிறதா என்று பார்க்க வேண்டியதுதான் உங்கள் வேலை. மேற்கொண்டு எதையும் கேட்க உங்களுக்கு உரிமை இல்லை' என்று கூறி தணிக்கையாளரின் வாயைப் பொத்தி விட்டார்.

  கார்ப்பரேட் செக்டார் ஒழுங்கான முறையில் கடன்களையோ கடனுக்குரிய வட்டியையோகூடக் கட்டுவதில்லை. சட்டப்படி அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளையும் செலுத்துவதில்லை. இப்படிப்பட்ட கம்பெனிகளை Defaulter  என்றும், Wilful Defaulter என்றும் குறிப்பிடுகிறார்கள்.

  பெரும்பாலும் இப்போது கம்பெனி நிர்வாகத்தினரின் சொத்துக்களை அடமானம் வாங்குவதில்லை; அவர்களின் கையெழுத்தும் வாங்குவதில்லை.

  இப்பொழுது Asset Based, Performance Based என்ற இரு வகையில் கடன் வழங்குகிறார்கள். இந்த வகையில் ஆஹக் ஈங்க்ஷற்ள் மலை போல் உயர்ந்து வருகிறது.

  இந்தப் பணமெல்லாம் யாருடையது? இந்திய மக்களுடையது. இந்தப் பணத்தை வசூலிக்க Securitisation Act என்று ஒரு சட்டம் இயற்றியது அரசு. வாராக் கடன் உள்ள கம்பெனிகளை, அரசே ஏற்று நடத்தலாம் என்ற அதிகாரத்தைப் பெற்றது.

  ஆனால், அதைத் தொடர்ந்து செய்யவில்லை. ஏனெனில் நிர்வாகம் என்பது எளிதல்ல.

  இந்த வாராக் கடன்களை சற்று மாறுதல்கள் செய்தாவது, வசூலிக்க முயற்சி செய்ய வேண்டாமா? சாதாரண இந்தியக் குடிமகனின் சேமிப்பைக் காக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது.

  வாராக் கடன் நிலுவையில் உள்ள கம்பெனிகளின் சொத்தையும், நிர்வாகிகளின் சொத்தையும் ஏற்பதோடு, நிர்வாகத்தில் உள்ளவர்களின் தவறுகளுக்கு தண்டனையும் வழங்கினால், நாம் எந்த நாட்டையும் முதலீடு செய்ய அழைக்க வேண்டியதில்லையே.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai