வேட்டையாடாதே... விளையாடு...

காட்டு விலங்குகளை வேட்டையாடலாம். அப்படி வேட்டையாடிய காட்டு விலங்குகளுடன் ஒரு விளையாட்டாக அந்த வேட்டைக் காட்சிகளைப் படமெடுத்துத் தங்கள் வீரத்தைப் பறைசாற்றலாம். இது இன்றைய இந்தியாவில் நடக்காது. வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம் வேட்டையாடிகளைத் தண்டிக்கத் தயங்காது. ஆனால், ஆப்பிரிக்காவில் இன்னமும் வேட்டையாடி விளையாட முடியும்.
வேட்டையாடாதே... விளையாடு...
Published on
Updated on
3 min read

காட்டு விலங்குகளை வேட்டையாடலாம். அப்படி வேட்டையாடிய காட்டு விலங்குகளுடன் ஒரு விளையாட்டாக அந்த வேட்டைக் காட்சிகளைப் படமெடுத்துத் தங்கள் வீரத்தைப் பறைசாற்றலாம். இது இன்றைய இந்தியாவில் நடக்காது. வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம் வேட்டையாடிகளைத் தண்டிக்கத் தயங்காது. ஆனால், ஆப்பிரிக்காவில் இன்னமும் வேட்டையாடி விளையாட முடியும்.

நேஷனல் ஜியோக்ரஃபிக், நியோ வைல்டு, டிஸ்கவரி, அனிமல் பிளேனட் போன்ற டி.வி. சேனல்களில் கொடிய மிருகங்களான சிங்கம், புலி, சிறுத்தை, யானை, கரடி போன்ற மிருகங்கள் எவ்வாறு சாது மிருகங்களைக் கொல்கின்றன? எப்படி இனப்பெருக்கம் நிகழ்கிறது, ராஜநாகத்தைப் பிடிப்பது எப்படி போன்ற வேட்டை விளையாட்டுகளைத் தத்ரூபமாகக் கண்முன் கொண்டு வந்து நிறுத்துவதை நாம் வியப்புடன் ரசித்து மகிழ்ந்து வருகிறோம். ஆனால், இதில் விளையாடும் பல மில்லியன் டாலர் வியாபாரத்தை நாம் அறிவதில்லை.

காட்டு விலங்குகளின் சொர்க்க பூமி ஆப்பிரிக்கா. அங்குதான் மேற்படி சேனல்களின் படப்பிடிப்புகள் நிகழ்கின்றன. பார்ப்பவை படப்பிடிப்புகள். பார்க்காதவை, காட்டு விலங்குகளின் கொள்ளைக் காட்சிகள்.

மேற்குத் தொடர்ச்சி மலைக்காட்டுப் பகுதியில் தந்தங்களுக்காக யானை வேட்டையாடிய சந்தன வீரப்பன் விலங்கியல் விஞ்ஞானம் படிக்காத கொள்ளைக்காரன். ஆனால், ஆப்பிரிக்காவில் விலங்குகளை முழுமையாகக் கொள்ளையடிப்போர் விலங்கியல் விஞ்ஞானம் படித்த அமெரிக்க வெள்ளையர்கள்!

ஆப்பிரிக்க நாடுகளில் வருமானத்திற்காக "கோட்டா' அடிப்படையில் விலங்கு வேட்டை அனுமதிக்கப்படுகிறது. உயிருடனோ, கொல்லப்பட்டோ சிங்கம், புலி, சிறுத்தை, யானைகள் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன.

வனவிலங்குகள் கொல்லப்படுவதற்குக் "கோட்டா' தயாரிக்கும் அனைத்துலக அமைப்பின் பெயர், இஐபஉந. அதாவது இர்ய்ஸ்ங்ய்ற்ண்ர்ய் ர்ய் ஐய்ற்ங்ழ்ய்ஹற்ண்ர்ய்ஹப் பழ்ஹக்ங் ண்ய் ங்ய்க்ஹய்ஞ்ங்ழ்ங்க் நல்ங்ஸ்ரீண்ங்ள் ர்ச் ஜ்ண்ப்க் ஊஹன்ய்ஹ ஹய்க் ஊப்ர்ழ்ஹ. தமிழில் "அழிந்து வரும் தாவரங்கள், விலங்கினங்களின் அனைத்துலக வர்த்தக விதிமுறை அமைப்பு'.

மேற்படி "சைட்ஸ்' வழங்கிய தகவல் அடிப்படையில் 1981-லிருந்து 2012 வரை 2040 யானைகள், 1,46,155 முதலைகள், 70 சிங்கங்கள், 1,220 புலிகள், 205 சிறுத்தைகள், 1,210 நீர் யானைகள், 5 காண்டா மிருகங்கள் கொல்லப்பட்டுள்ளன. முதலை பலி ஆப்பிரிக்காவில் அதிகம் இல்லை. இந்தோனேசியா, வியட்நாம், கைனா பிங்கா நாடுகளில் முதலைகள் கொல்லப்படுகின்றன.

இவ்வாறு "கோட்டா' நிர்ணயித்துக் கொல்லப்படும் வனவிலங்குகளின் ஏற்றுமதி மதிப்பு ஆண்டுக்கு 300 பில்லியன் டாலர். சட்டத்திற்குப் புறம்பாக "சைட்ஸ்' பார்வைக்குத் தப்பிக் கடத்தப்படும் சரக்கு மதிப்பு 200 பில்லியன் டாலர். ஆப்பிரிக்காவிலிருந்து வனவிலங்கு இறக்குமதி செய்யும் நாடுகள் அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, தென்னாப்பிரிக்கா, சீனா, இந்தியா.

கொல்லப்படும் விலங்குகளின் பயன் என்ன? உலகப் பணக்காரர்களில் பலர் தங்கள் ஆடம்பரத்தையும் வீரத்தையும் பறைசாற்ற சிங்கம், புலிகளின் பாடம் செய்யப்பட்ட அசல் முகம், தோல், நகம், பற்கள் ஆகியவற்றைக் காட்சிப் பொருள்களாக வைத்து அகமகிழ்கிறார்கள். சிங்கத்தின் பற்கள், புலி நகம், ராஜநாகத்தின் தோல், யானைத் தந்தம், காண்டாமிருகக் கொம்பு ஆகியவை மில்லியன் டாலர் வியாபாரங்கள். இக்காரணங்களினால் அரிய இன விலங்குகளின் களவு அதிகரித்துவிட்டது.

"சைட்ஸ்' வழங்கும் தகவல் அடிப்படையில், 1981-இலிருந்து 2012-க்கு வரும்போது ஆப்பிரிக்காவில் 50 சதவீத அரிய விலங்கினத்தொகை அழிந்துவிட்டது. அண்மையில் நடந்த இஞட 21 - பாரீஸ் பூமி மகாநாடு நாம்பியா, ஜாம்பியா, ஜிம்பாவே நாடுகளுக்கு யானை தந்த ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கி இந்தியாவை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

இந்தியக் கதை என்ன? லெமூரியாக் கண்டத்தில் ஆப்பிரிக்காவும் இந்தியாவும் ஒரே நிலப்பகுதி என்பது 20 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட பூகோளமாகும். அதற்கு சாட்சியாக இந்திய விலங்கினங்களுக்கும் ஆப்பிரிக்க விலங்கினங்களுக்கும் உருவ ஒற்றுமைகள் உள்ளன. இது வேட்டையாடிகளுக்கு அனுகூலம்.

இந்தியாவில் வேட்டையாடியதை ஆப்பிரிக்கச் சரக்கு என்று கூறி ஏமாற்றும் பேர்வழிகள் நிறைய உண்டு. தவிரவும், ஆப்பிரிக்காவிலிருந்து வேட்டையாடப்பட்ட விலங்குகளை இறக்குமதி செய்ய இந்திய அரசுக்கு ஆண்டுக்கு ஆண்டு அனுமதி கோரி வரும் விண்ணப்பங்கள் கூடியவண்ணம் உள்ளன. 2015-இல் மட்டும் 250 விண்ணப்பங்கள் வந்துள்ளன.

பெரிய பெரிய ஐந்து நட்சத்திர ஓட்டல்கள், வர்த்தக முதலைகள், பெருந்தொழில் நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. புலி முகம், சிங்க முகம், யானை தந்தம், கொடிய விலங்குகளின் பற்கள், நகங்கள், தோல் எல்லாம் கண்காட்சிகளே.

இப்படியெல்லாம் சட்டரீதியாகவும், சட்டத்திற்குப் புறம்பாகவும் அனைத்துலக வனவிலங்கு வர்த்தகம் பற்றிய தகவல்கள், விலை விவரங்களை வழங்கும் வலைத்தளங்களின் எண்ணிக்கை சுமார் 300 வரை உண்டு. இவை உலகளாவியவை. வனக்குற்றப் பொருள்களை "ஆன்லைன்' மூலம் பெற நவீன தொழில்நுட்பம் உதவுகிறது.

வனவிலங்குகள் உயிருடன் வேண்டுமா? உயிரற்ற உடல் வேண்டுமா? பாடம் செய்யப்பட்ட பகுதிகள் வேண்டுமா? எல்லாமே "ஆன்லைன்' மூலம் பெறலாம்.

நம்மைச் சுற்றியுள்ள உலகம் இப்படியெல்லாம் பாதகம் செய்யும்போது நமது விலங்கியல் பாதுகாப்பு உணர்வு கேலிக்கூத்தாகப் படுகிறது. வனங்களில் விலங்கியல் படித்த வீரப்பர்களைச் சட்டவிரோதமாக சிங்கம், புலி, யானைகளை வேட்டையாட விட்டு விட்டு, போயும் போயும் பாம்பாட்டிகள், வீதியில் கரடி வித்தை, குரங்கு வித்தைக் காண்பிக்கும் கலைஞர்கள் மீது விலங்குப் பாதுகாப்புச் சட்டம் பாய்கிறது. ஸ்பெயினில் ஆண்டுதோறும் காட்டு எருமைக்கடாவைப் பாயவிட்டு அதை அடக்கும் ஒரு புனித விழா நிகழ்கிறது.

தமிழரின் சங்ககாலப் பெருமையை விளக்கும் ஏறுதழுவுதலின் தொடர்ச்சியாக இன்றளவும் நிகழும் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்குத் தடை ஏன்? முன்பெல்லாம் திரைப்படத்துக்குச் சமமாக ஊருக்கு ஊர் சர்க்கஸ் நடைபெறுவதுண்டு. வனவிலங்குகளைக் கூண்டிலடைத்து அக் கூண்டுக்குள் மனிதன் வித்தை புரியும் வினோதங்களை மக்கள் ரசித்தனர். இன்று இயலாது; சர்க்கஸ் தடை செய்யப்பட்டுள்ளது.

கிராமங்களிலும் ஊர்களிலும் விஷப் பாம்புகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. தமிழ்நாட்டில் மட்டும் சராசரியாக தினம் 10 விவசாயிகள் பாம்பு கடித்து இறந்து விடுகின்றனர். கிராமங்களில் ஏன் விஷப் பாம்புகள் பெருகின என்று விசாரித்தால், பாம்பு பிடிப்பது சட்டப்படி குற்றம் என்பதால் பாம்பைப் பிடித்துப் பிழைப்பை நடத்தும் பாம்பாட்டிகளும், இருளர்களும் இன்று காணாமல் போய்விட்டனராம். பாம்போடு வாழப் பழகிக்கொள் என்று வனவிலங்குச் சட்டம் போதிக்கிறது! ஆகவே, பாம்புகளின் எண்ணிக்கை உயர்ந்துவிட்டது; ஆபத்தும் அதிகமாகிவிட்டது.

விவசாயத்தை நாசப்படுத்துவதில் குரங்கின் பங்கு கொஞ்ச நஞ்சமல்ல. குறிப்பாகப் பழத் தோட்டங்களையும் மாடித் தோட்டங்களையும் சின்னாபின்னமாக்கி விடுகிறது. குரங்காட்டிகள் மீண்டும் வந்தால் இந்தப் பிரச்னை தீரும்.

நெல்லை பயிர் செய்த விவசாயி எப்போது கதிர் தள்ளிப் பயிர் சாயும் என்று வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு, போட்ட முதல் எடுக்க முடியுமா என்று கவலைகொள்ளும் வேளையில், சாய்ந்துவிட்ட கதிர்களைக் கொத்தித் தின்ன மயில்கள் கூட்டமாக வரும். அதை ஒரு விவசாயி வேடிக்கை பார்க்க முடியுமா? வெடிவைத்து விரட்டுவார்.

எதிர்பாராமல் மயில் இறந்துவிட்டால் சட்டம் அவர்மீது பாயும். பாதுகாக்கப்பட்ட வனங்களிலிருந்து வெளியேறும் யானை, புலிகளுக்குக் கரும்புத் தோட்டம் பசி தீர்க்கும். கரும்பைப் பாதுகாக்க வேட்டையாடிய விவசாயி கம்பி எண்ண வேண்டும். வனங்களில் திரியும் விலங்குகளுக்குப் போதிய தீவனமோ தண்ணீரோ இல்லாத சூழ்நிலையில் ஓர் அரசு என்ன செய்ய வேண்டும்?

வனத்தைவிட்டு வெளியேறும் விலங்குகளுக்குப் பாதுகாப்பாக மாவட்டந்தோறும் தண்ணீர் வசதியுள்ள இடத்தைத் தேர்வு செய்து புதிய உயிரியல் பூங்காக்களை உருவாக்கிக் காட்சிப் பொருளாக அமைத்து வருமானமும் பெறலாம்.

உயிரியல் பூங்காக்களில் பாம்புப் பண்ணைகளை அமைக்கலாம். மக்களை அச்சுறுத்தும் விஷப்பாம்புகளை வளர்க்கும் நுட்பம் தெரிந்த இருளர் போன்ற மக்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கலாம். பாம்பு விஷத்திற்கு நிறையத் தேவை உள்ளது; நல்ல விலையும் உள்ளது.

விவசாயிகளை அச்சுறுத்தும் மயில், குரங்குகளையும் மாவட்ட உயிரியல் பூங்காக்களில் சேர்ப்பித்துவிடலாம். சர்க்கஸ் வித்தைகளைப் புதுப்பித்து உரிமம் வழங்கலாம். தேர்தல் வாக்குறுதிகளில் மாவட்டந்தோறும் உயிரியல் பூங்கா, பாம்புப் பண்ணை அமைத்தல், சர்க்கûஸ மீண்டும் கொண்டு வருதல், ஜல்லிக்கட்டுக்குத் தடை நீக்கம் ஆகியவை இடம்பெற வேண்டும்.

காட்டு விலங்குகளை வேட்டையாடி வருமானம் பெறும் ஆப்பிரிக்காவின் கொள்கை தவறு; அது வேண்டாம். ஆனால், விளையாட்டு வேண்டும். விலங்குகளை வேட்டையாட வேண்டாம். விலங்குகளை அதிகம் இம்சைப்படுத்தாமல் விளையாடுவது தவறு இல்லை. ஆளும் கட்சிகளும், எதிர்க்கட்சிகளும்

இந்தப் பிரச்னையை யோசித்தல் நலம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com