வாழத் தகுதியான நகரங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த நாடு எது தெரியுமா?

உலக அளவில் வாழத் தகுதியுள்ள மற்றும் தகுதியற்ற நகரங்களைப் பற்றி ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வின் முடிவில், ஆஸ்திரேலியாவின்
வாழத் தகுதியான நகரங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த நாடு எது தெரியுமா?

உலக அளவில் வாழத் தகுதியுள்ள மற்றும் தகுதியற்ற நகரங்களைப் பற்றி ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வின் முடிவில், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன்தான், உலக அளவில் வாழ்வதற்கு உகந்த நகரம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தி எக்கனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் உலக அளவில் 140 நகரங்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றில் எந்தெந்த நகரங்கள் வாழ்வதற்கு மிகவும் தகுதியானவை மற்றும் எந்தெந்த நகரங்கள் வாழத் தகுதியற்றவை என்ற ஆய்வை செய்துள்ளது. ஒரு நகரத்தில் இருக்கும் நிலைத்தன்மை, சுகாதாரம், கலாசாரம், சுற்றுச்சூழல், கல்வி மற்றும் உள்கட்டமைப்பு போன்ற 30 காரணிகளை வைத்து "உலகளாவிய வாழ்வுரிமை அறிக்கை 2017" என தலைப்பில் இந்த ஆய்வுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வு அறிக்கையின் ஒப்பீட்டளவில், ஆஸ்திரேலியா மற்றும் கனடா நகரங்கள் உலகிலேயே மிகவும் "வாழ்வாதாரமாக" ஆதிக்கம் செலுத்துகின்றன,

அதன்படி, தாகா 136-வது இடத்திலும் அல்ஜீயர்ஸ் 135-வது இடத்திலும், கராச்சி 134-வது இடத்திலும் இருக்கின்றன. அதேபோல, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரம் ஏழாவது ஆண்டாக 97.5 மதிப்பெண்களுடன் முதலிடத்தைப் பிடித்து, சுகாதாரப் பாதுகாப்பு, கல்வி மற்றும் உள்கட்டமைப்பில் சரியான மதிப்பெண்கள் பெற்றதுடன் வாழ மிகவும் தகுதியான நகரம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. அதேபோல இந்தப் பட்டியலின் இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களை முறையே ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவும் கனடாவின் வான்கோவர் நகரங்களும் பிடித்துள்ளன. நான்காவது இடத்தில் கனடாவின் டொரொண்டோவும், 5-வது இடத்தில் கால்கரி, ஆறாவது இடத்தில் ஆய்திரேலியாவின் அடிலெய்டு, 7-வது இடத்தில் பெர்த், 8-வது இடத்தில் நியூசிலாந்தின் ஆக்லாந்து, 9-வது இடத்தில் பின்லாந்தின் ஹெல்சிங்கி, 10-வது இடத்தில் ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரமும் இடம்பெற்றுள்ளன.

ஒவ்வொரு 10 இடங்களிலும் மூன்று நகரங்கள் இடம்பிடித்துள்ளன. அமெரிக்கா முதல் 10 இடங்களை இழந்துள்ளது. இதற்கு காவல்துறை அதிகாரிகளால் கறுப்பின மக்கள் அதிக எண்ணிக்கையில் உயிரிழப்பு, அதிபர் டிரம்பின் கொள்கைகளால் நாட்டில் நடைபெற்று வரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் மற்றும் நிர்வாக உத்தரவுகளே இதற்கு காரணம் என ஆய்வு அறிக்கை கூறுகிறது.

"நியூயார்க், லண்டன், பாரிஸ் மற்றும் டோக்கியோ ஆகியவை பொழுதுபோக்குப் பணிகள் நிறைந்த செல்வாக்கு உள்ள நாடுகளாகும், ஆனால், அனைத்து நாடுகளுமே குற்றம், நெரிசல் மற்றும் போக்குவரத்து சிக்கல்களால் பாதிக்கப்படுகின்றனர் என்று தெரிவித்துள்ளது.

மேலும், பாகிஸ்தானின் கராச்சி மற்றும் வங்காள தேசத்தின் தாகா ஆகிய நகரங்கள் வாழ்வதற்கு மிகவும் தகுதியற்றவை என்றும் கூறப்பட்டுள்ளது.

இவைத்தவிர, ஈராக், லிபியா, சிரியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் உள்நாட்டு அமைதியின்மை மற்றும் ஆயுத மோதல்களுக்கு உட்பட்டுள்ளன. அதே நேரத்தில் நைஜீரியா போன்ற பல நாடுகளும் கிளர்ச்சிக்காரர்களை எதிர்த்து போரிட்டு வருகின்றன தெரிவித்துள்ளது.

"அதிக அளவிலான குற்றங்களை தடுத்து, அதிகமான உள்கட்டுமான உள்கட்டமைப்புகளுக்கு வழிவகுத்தால் அவை பொழுதுபோக்கு நடவடிக்கைகளை ஊக்குவிக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com