‘பன்றிகள் வாழும் இந்தியாவிற்கே திரும்பி செல்’ என்று டிரம்ப்பை விமர்சித்தவரைத் திட்டி தீர்த்த பெண்!

அமெரிக்காவில் தொழில் நிறுவனம் ஒன்றின் தலைமை நிர்வாகியான ரவின் காந்தி என்பவர் சார்லோட்டெஸ்வில்வில் நடைபெற்ற நிகழ்விற்குப் பிறகு டிரம்ப்பின் பொருளாதார கொள்கைகளை விமர்சித்து கட்டுரை ஒன்றை வெளியிட்டார்.
‘பன்றிகள் வாழும் இந்தியாவிற்கே திரும்பி செல்’ என்று டிரம்ப்பை விமர்சித்தவரைத் திட்டி தீர்த்த பெண்!

அமெரிக்காவில் தொழில் நிறுவனம் ஒன்றின் தலைமை நிர்வாகியான ரவின் காந்தி என்பவர் சார்லோட்டெஸ்வில்வில் நடைபெற்ற நிகழ்விற்குப் பிறகு டிரம்ப்பின் பொருளாதார கொள்கைகளை விமர்சித்து சிஎன்பிசி செய்தி ஊடகத்தில் ஆகஸ்ட் 17-ம் தேதி கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தார்.   

அந்தக் கட்டுரையில் “டிரம்ப் அமெரிக்க பிரதமராக தேர்வு செய்யப்பட்ட பின் நானும் ஒரு குடிமகனாக அவருக்குத் துணை நிற்பேன் என உறுதி எடுத்தேன், ஆனால் சமீபத்தில் வர்ஜீனியாவில் உள்ள சார்லோட்டெஸ்வில்வில் அவர் நிற வாதத்தையும், நாசி கொள்கைகளுடனும் கூடியிருந்த மக்களுக்கு முன் பேசியதை பார்த்த பின் என்னால் இதை பொருத்துக் கொள்ள முடியவில்லை. 50,000-திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உங்களுடைய பொருளாதார கொள்கைகளால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். நீங்கள் சொல்வது போல அமெரிக்காவைப் பெருமைப்படுத்த மீண்டும் உங்களை ஜனாதிபதியாகத் தேர்வு செய்யாமல் இருப்பதே சிறந்த வழி” என்று அவரைச் சாடியுள்ளார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரவின் காந்தி பிறந்ததே அமெரிக்காவில்தான். இந்தக் கட்டுரையை படித்த டிரம்ப்பின் ஆதரவாளரான பெண் ஒருவர் இவரது பெயருக்கு ஒலிப் பதிவு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது “உன்னுடைய குப்பை கருத்துகளை எடுத்துக்கொண்டு உன்னுடைய நாடான இந்தியாவிற்கே சென்று விற்பனை செய், டிரம்ப்பை பற்றி தவறாகப் பேச உனக்கு அருகதையே கிடையாது, பன்றிகள் வாழும் இந்தியாவிற்குச் சென்று முதலில் அங்குள்ள குப்பைகளையும், அழுக்கினையும் சுத்தம் செய், அருவருக்கத்தக்கக் குப்பைகூளமாக இந்திய உள்ளது அதை விடுத்து அமெரிக்காவைப் பற்றி பேசுகிறாயா நீ?” என்று தகாத வார்த்தைகளாலும் இந்தியர்களையும், ரவின் காந்தியையும் அந்தப் பெண் சரமாரியாகத் திட்டி தீர்த்துள்ளார்.

இதைப்பற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ரவின், தனது தாய் தந்தையர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பது உண்மைதான், ஆனால் அவர்கள் 1968-ம் ஆண்டே அமெரிக்காவிற்கு வந்துவிட்டனர், தான் பிறந்ததே அமெரிக்காவில்தான் என்பதால் தன்னை எங்கே திரும்பி செல்லச் சொல்கிறார் இந்தப் பெண் என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் “இந்த ஒலிப் பதிவை கேட்டவுடன் முதலில் நானும் அதிர்ச்சி அடைந்தேன், ஆனால், இப்போது இதைக் கேட்டால் எனக்குச் சிரிப்புதான் வருகிறது. எனக்கு ஒரு விஷயம் மட்டும் புரியவில்லை, எந்த வகையில் பார்த்தாலும் நானும் அமெரிக்க பிரஜைதான். தலைமுறைகளாகப் புலம்பெயர்ந்தோரும் அந்த நாட்டின் குடிமகன் என்பதை மறுக்க முடியாது” என்றும் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com