விக்கிப்பீடியாவின் ஆசிய மாதமான நவம்பர் 2017-ல் என்ன சிறப்பு?

ஆசிய விக்கிப்பீடியக் குமுகங்களுக்கிடையில் புரிந்துணர்வை மேம்படுத்துவதை
விக்கிப்பீடியாவின் ஆசிய மாதமான நவம்பர் 2017-ல் என்ன சிறப்பு?

தகவல்களின் யுகம் இது. ஒரு கட்டுரையை எழுதவும், பொது அறிவை மேம்படுத்தவும் நாம் சரண் அடைவது கூகிளை தான். கூகிளில் தேடும் போது அது விக்கியபீடியாவை  சுட்டிக் காட்டும். அரிய தகவல்கள் பல விக்கிப்பீடியாவில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தன்னார்வலர்கள் பலரால் இன்று இச்சாதனையை அடைந்துள்ள விக்கிபீடியா உண்மையில் கட்டற்ற களஞ்சியம் என்றால் மிகையில்லை. விக்கிபீடியாவில் ஒரு தகவலை உறுதி செய்வதற்காக தேடிய போது இந்தப் புதிய தகவல் கிடைத்தது. வாசகர்கள்  பங்கேற்க உதவலாம்.  

ஆசிய விக்கிப்பீடியக் குமுகங்களுக்கு இடையே புரிந்துணர்வை மேம்படுத்த ஆசிய மாதம் (Asian Month) என்னும் தொடர் தொகுப்பு நிகழ்வு ஒன்று நவம்பர் 2017 நடைபெற உள்ளது.

பல்வேறு மொழிகளில் அமைந்த விக்கிப்பீடியாக்களிலும் இது நடத்தப்படவுள்ளது. இந்நிகழ்வில் பங்குகொள்ளும் விக்கிப்பீடியர்கள் ஆசியா தொடர்பான தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளை உருவாக்கவும் , ஏற்கனவே பதிவிடப்பட்டுள்ள கட்டுரைகளில் மேலதிகத் தகவல்களைச் சேர்க்கவும், மேம்படுத்தவும் ஊக்குவிக்கப்படுகின்றனர்.

கீழே தரப்பிட்டுள்ள விதிமுறைகளை கடைப்பிடித்து குறைந்தது ஐந்து புதிய கட்டுரைகளை உருவாக்கும் பங்களிப்பாளர்களுக்கு, பங்குகொள்கின்ற ஏனைய நாடுகளிலிருந்து, சிறப்புற வடிவமைக்கப்பட்ட அஞ்சலட்டைகளை அனுப்புவர்.

ஒவ்வொரு விக்கிப்பீடியா திட்டத்திலும் கூடுதல் எண்ணிக்கையில் கட்டுரைகளை உருவாக்கும் விக்கிப்பீடியர்கள், 'விக்கிப்பீடியாவின் ஆசிய தூதுவர்கள்’ என சிறப்பிக்கப்படுவார்கள்.
 
விதிகள்

  • கட்டுரைகளை (குறுங்கட்டுரை விரிவாக்கம் அல்ல) நவம்பர் 1, 2017 00:00 முதல் நவம்பர் 30, 2017 23:59 UTC வரையான காலப்பகுதியில் புதிதாக உருவாக்க வேண்டும்.
  • கட்டுரையின் உரைப்பகுதி (வார்ப்புரு, குறிப்புகள், உசாத்துணை, ஆதாரங்கள், நூல் பட்டியல் போன்றவை தவிர்த்து) குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும். wordcounttools கொண்டு சொற்கள் எண்ணிக்கை சரி பார்க்கப்படும்.
  • குறிப்பிடத்தக்கமை நிறுவப்பட வேண்டும்.
  • உசாத்துணை, சான்றுகள், மேற்கோள்கள் நிறுவப்பட வேண்டும்.
  • 100% இயந்திர மொழிபெயர்ப்புகள் நிராகரிக்கப்படும்.
  • தமிழ் விக்கிப்பீடியா ஒருங்கிணைப்பாளர்களின் முடிவே இறுதியானது.
  • பட்டியல் பக்கங்கள் எழுதலாம். ஆனால், அஞ்சல் அட்டை பெறுவதற்கான கட்டுரை எண்ணிக்கையில் கருத்தில் கொள்ளலாகாது.
  • உங்களின் சொந்த நாட்டைப் பற்றி அல்லாமல் (எ.கா: இந்தியா, இலங்கை) மற்ற ஆசிய நாடுகள் அல்லது வட்டாரங்கள், ஆசியப் புவியியல் தோற்றப்பாடுகள் (எ.கா: மலை, நதி, பள்ளத்தாக்கு), இடங்கள், வரலாற்றுத் தளங்கள், கைத்தொழில்கள், கலாசாரம் பற்றியதாக இருக்க வேண்டும். நபர்கள், மொழிகள் பற்றிய கட்டுரைகள் ஏற்கப்பட மாட்டாது.

ஒருங்கிணைப்பாளர்கள் - தினேஷ்குமார் பொன்னுசாமி

தகவல்  - தமிழ் விக்கிப்பீடியா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com