பிச்சை எடுப்பது விரும்பி செய்வதல்ல; வேறு வழியில்லாமல்: சொன்னது நீதிமன்றம்

தலைநகர் தில்லியில் பிச்சை எடுப்பது கிரிமினல் குற்றமாகாது என்று தெரிவித்த தில்லி உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக கொண்டு வரப்பட்டுள்ள சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தது.
பிச்சை எடுப்பது விரும்பி செய்வதல்ல; வேறு வழியில்லாமல்: சொன்னது நீதிமன்றம்

தலைநகர் தில்லியில் பிச்சை எடுப்பது கிரிமினல் குற்றமாகாது என்று தெரிவித்த தில்லி உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக கொண்டு வரப்பட்டுள்ள சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தது.

'பிச்சை எடுப்பது கிரிமினல் குற்றமாகும்' என மும்பை பிச்சை எடுப்பு தடுப்பு சட்டத்தை மகாராஷ்டிர அரசு கொண்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பிச்சை எடுப்பது அவர்களின் அடிப்படை உரிமை என்று உத்தரவிடக் கோரியும் ஹர்ஷ் மந்தர், கர்நிகா சாஹே ஆகிய இருவர் தில்லி உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் மீதான விசாரணை தலைமை நீதிபதி (பொறுப்பு) கீதா மித்தல், நீதிபதி சி.ஹரிசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணை நடைபெற்று வந்தன. 

இந்நிலையில் தலைமை நீதிபதி அமர்வு புதன்கிழமை தெரிவித்ததாவது: பிச்சை எடுப்பது குற்றம் என்று கூறுவது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. ஆகையால், பிச்சை எடுப்பது கிரிமினல் குற்றம் என்றும் அதில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொண்டு வரப்பட்ட சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மேலும் தில்லியில் கட்டாயப்படுத்தி பிச்சை எடுக்க வற்புறுத்தபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வகையில் தில்லி அரசு தனியாக சட்டம் கொண்டு வரலாம்' என்று தெரிவித்தது. 

கடந்த மே 16ஆம் தேதி இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், "மக்களுக்கு தேவையான உணவு, பணியிடங்கள் ஆகியவற்றை அரசு அளிக்காதபோது பிச்சை எடுப்பதை எப்படி குற்றமாக அறிவிக்க முடியும்' என்று தெரிவித்திருந்தது.

மேலும், பிச்சை எடுப்பது ஒருவர் தேர்ந்தெடுத்து செய்யும் செயல் அல்லது என்றும், வேறு வழியே இல்லாத நிலையில் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள் என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. பிச்சை எடுப்பதற்கு ஒருவர் விரும்புவதில்லை, தேவைக்காகவே பிச்சை எடுக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டது.

இந்தியாவில் மட்டும் 4,13,670 பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள். அதில் 2.2 லட்சம் பேர் ஆண்கள், 1.91 லட்சம் பேர் பெண்கள். இது 2011ம் ஆண்டைய மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் வெளியான தகவல். இது நிச்சயம் கடந்த 8 ஆண்டுகளில் கணிசமாக அளவில் உயர்ந்திரக்கும்.

இந்தியாவிலேயே அதிக பிச்சைக்காரர்களைக் கொண்டிருக்கும் மாநிலமாக மேற்கு வங்கம் உள்ளது. இங்கு சுமார் 1 லட்சம் அளவுக்கு பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள்.

20 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் பிச்சை எடுப்பதற்கு எதிரான சட்டம் அமலில் உள்ளது. இந்த மாநிலங்களில் பிச்சை எடுப்பது குற்றமாகும்.

பிச்சைக்காரர் என்று கருதும் எவர் ஒருவரையும் காவல்துறை பிடித்து நடவடிக்கை எடுக்க இந்த சட்டம் வழிவகை செய்கிறது. பிச்சை எடுக்கும்போது பிடிபடும் ஒருவருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கவும் சட்டம் வழிவகை செய்கிறது. தொடர்ந்து பிச்சை எடுத்து பிடிபட்டால் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க முடியும். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com