தினமணியின் காதலர் தின ஸ்பெஷல் பக்கம்! டேட்டிங் முதல் ப்ரேக் அப் வரையிலான காதல் பதிவுகள்!
By கார்த்திகா, பவித்ரா, உமா | Published On : 14th February 2018 01:04 PM | Last Updated : 14th February 2018 01:32 PM | அ+அ அ- |

பிப்ரவரி 14 - இந்த தினத்தை இத்தனை இனிமையாக மாற்றச் செய்தது எதுவென்று காதலர்கள் யோசிக்க மாட்டார்கள். அவர்கள் தான் காதலைக் கொண்டாடுவதில் மும்முரமாக உள்ளார்களே! பிரியத்துக்கு உரியவரிடம் காதலை எப்படி காதலைச் சொல்வது என்று தயங்குபவர்களுக்கு உதவியாக உருவானதுதான் வாலண்டைன்ஸ் டே ட்ரெஸ் கோட் (Valentines Dday Dress Code). காதலர்கள் உலகத்தில் இது பிரசித்தம்.
அந்தந்த நிறத்தில் உடை அணிந்து, காதலைச் சொல்லியாகிவிட்டது. காதலி / காதலனிடமிருந்து க்ரீன் சிக்னல் கிடைத்துவிட்டது. அதன்பின் என்ன? கொண்டாட்டம் தானே? அதுவும் எப்படி! ஷெட்யூல் போட்டு காதலிக்கிறார்கள் இன்றைய இளசுகள். இந்த ஸ்பெஷல் தினங்கள் காதலர் தினத்துக்கு ஒரு வாரம் முன்பே தொடங்கிவிடும். ஒவ்வொரு தினமும் ஒரு கொண்டாட்டமாக மலர்கின்றது. பிப்ரவரி 7 ரோஸ் டே, 8 ப்ரபோஸ் டே (ட்ரெஸ் கோடில் மிஸ் செய்தவர்கள் இந்த நாளில் விட்ட இடத்தைப் பிடிக்கலாம்), 9 - சாக்லெட் டே, 10 - டெட்டி டே, 11 - பிராமிஸ் டே, 12 - கிஸ் டே, 13 - ஹக் டே, 14 - வாலண்டைன்ஸ் டே. ஒரு வாரம் முழுக்க மட்டுமல்லாமல், அக்காதல் வாழ்நாள் முழுவதும் காதல் எனத் தொடர்ந்தால் சந்தோஷம்தான்.
காதலர் தினம் 1537-ம் ஆண்டு இங்கிலாந்து மன்னர் 7-ம் ஹென்றிம் செயின்ட் வாலண்டைன் எனும் பாதிரியாரின் நினைவாக பிப்ரவரி 14-ம் தேதியை காதலர் தினமாக அறிவித்தார்.
காற்றில் காதலைக் கலந்துவிட்ட இந்த தினத்தில் எல்லாமே ஸ்பெஷல். இதோ காதலர்களையும் காதலையும் சிறப்பிக்கும் வண்ணம் தினமணியின் காதலர் தின ஸ்பெஷல் பக்கம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதோ அதன் சுட்டி http://www.dinamani.com/valentines-special/ |
காதல் கடவுள் யார் தெரியுமா? க்யூபிட் (Cupid) என்பவர்தான் காதல் கடவுள். உலகம் முழுவதும் உள்ள மனிதர்களை காதல் வயப்பட வைக்கும் வல்லமை க்யூபிட் ஒருவருக்கே உண்டு என்கிறது கிரேக்க புராணம்.
காதலர் தினத்தில் அதிகம் பரிசளிக்கப்படுவது பூக்கள். அதிலும் குறிப்பாக ரோஜா மலர்கள். அதனால் தான் ரோஜா மலரே ராஜ குமாரி என்ற பாடலை அப்போதே எழுதிவிட்டார் கவிஞர் கண்ணதாசன்.
இன்றைய தினத்தில் காதலர்களுக்கிடையே பகிரப்படும் குறுஞ்செய்திகளும் காதல் விடியோக்களும் புகைப்படங்களும் இணையம் முழுவதும் வைரலாகி வருகிறது.
காதல் கொண்டாட்டமானது. அது ஒரே ஒரு முறைதான் வரும் என்பது ஒருசிலரின் நம்பிக்கை. காதலின் வெற்றி திருமணம் என்பது எழுதப்படாத விதி.
ஆனால் உண்மையில் காதல் திருமணத்தில் மட்டும் முடிந்துவிடக் கூடாது. வாழ்நாள் முழுவதும் தொடரும் நறுமணமாக அது காதலர்கள் மனத்தினுள் நிறை ஜோதியாய் ஒளிர வேண்டும். அதுதான் காதலின் வெற்றி.
எத்தனை முறை ஒரு மனத்தில் காதல் பூத்தாலும் அத்தனை முறையும் அது அவர்களைப் பொருத்தவரையில் கொண்டாட்டம்தான். காதல் என்பது அனைவருக்கும் உரிய பொதுவான உணர்வு அதனை கலாச்சாரத்துடன் தொடர்பு படுத்தி சுருக்கிவிடாதீர்கள் என்கிறார்கள் பல முறை காதலில் விழுந்து தம்மைத் தொலைத்தவர்கள்.
இப்படி காதலை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். பக்கங்கள் போதாது. எந்த சட்டகத்திலும் அதனை அடக்கி வைத்துவிட முடியாது.