யார் திருமதி சென்னை?

திருமணமான பெண்களின் திறமைகளுக்கு மேடை அமைத்துக் கொடுக்கும் வகையில்
யார் திருமதி சென்னை?

திருமணமான பெண்களின் திறமைகளுக்கு மேடை அமைத்துக் கொடுக்கும் வகையில் 'திருமதி சென்னை போட்டி' ஆண்டுதோறும் சென்னையில் நடைபெற்றுவருகிறது. அந்த வகையில் 2018-ம் ஆண்டின் திருமதி சென்னையை தேர்ந்தெடுப்பதற்கான போட்டிகள் தொடங்கியுள்ளன. 6 வாரங்கள் நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்பாளர்களுக்கான தேர்வு கடந்த 3-ம் தேதி அன்று தொடங்கியது. அதை தொடர்ந்து பல கட்ட தேர்வுகள் நடைபெறும்.

முதல் 25 இடங்களைப் பிடிக்கும் பங்கேற்பாளர்கள் ஆரோக்கியம், திறமை, பொது அறிவு ஆகியவற்றில் சோதிக்கப்படுவார்கள். பன்முகத் திறமை பெற்றவரே திருமதி சென்னையாக தேர்ந்தெடுக்கப்பட்டு, மகுடம் சூட்டப்படுவார். டிசம்பர் 14-ம் தேதி சென்னை லீலா பேலஸில் இறுதிச்சுற்று நடைபெறவுள்ளது. இதில் திருமதி சென்னை தேர்ந்தெடுக்கப்படுவார். பிரபலங்கள், வல்லுனர்கள் பங்கேற்று வெற்றியாளரை தேர்ந்தெடுக்க உள்ளனர்.

திருமதி சென்னையை தேர்ந்தெடுப்பதற்கான சமையல் ராணி சுற்று சென்னை சேத்துப்பட்டில் சமீபத்தில் நடைபெற்றது. சர்வதேச சமையல் கலை வல்லுனர் போக்டன் மக்சிமோவிச் மற்றும் பிரபல சமையல் கலைஞர் மல்லிகா பத்ரிநாத் பங்கேற்று போட்டியாளர்களுக்கு சமையல் கலை குறித்த சிறப்புகளை எடுத்துரைத்தனர். உணவை சுவையாக தயாரிப்பதற்கும் அழகாக பரிமாறுவதற்கும் ஆலோசனைகளை வழங்கினர். போட்டியின் இறுதியில் பிரசித்திப்பெற்ற இத்தாலிய பாஸ்தாவை தங்களுடைய பாணியில் போட்டியாளர்கள் பரிமாறினார்கள்.
 - ஸ்ரீ
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com