அட அப்படியா? தங்கள் தொகுதிகளைக் கண்டுகொள்ளாமல் விட்டதில் நட்சத்திர எம்பிக்களுக்கே முதல் இடம்

பொதுவாக ஒரு அரசியல் கட்சி, தொகுதிக்கான வேட்பாளரை தேர்வு செய்யும் போது முதலில் கருத்தில் கொள்வது புகழ்பெற்றவரா? பிரபலமானவரா? என்பதைத்தான்.
அட அப்படியா? தங்கள் தொகுதிகளைக் கண்டுகொள்ளாமல் விட்டதில் நட்சத்திர எம்பிக்களுக்கே முதல் இடம்


பொதுவாக ஒரு அரசியல் கட்சி, தொகுதிக்கான வேட்பாளரை தேர்வு செய்யும் போது முதலில் கருத்தில் கொள்வது புகழ்பெற்றவரா? பிரபலமானவரா? என்பதைத்தான்.

அதேப்போல, வாக்காளர்களும் தங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் நட்சத்திர அதாவது பிரபலமான வேட்பாளர்களையே அதிகம் தேர்வு செய்வார்கள்.

ஆனால் இப்படி நட்சத்திர அல்லது பிரபலமான ஒரு வேட்பாளர், போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் பிரதிநிதியானால், அவர் அந்த தொகுதிக்கு நல்லது செய்வாரா? அவரை தேர்வு செய்த மக்களுக்கு நட்சத்திர வேட்பாளர் நட்சத்திரமாக மின்னுவாரா என்றால்? இல்லை என்கிறது புள்ளி விவரம்.

சாதாரண எம்.பி.க்களை விட நட்சத்திர எம்.பி.க்களே தங்களது தொகுதிகளைக் கண்டுகொள்ளாமல் விட்டிருப்பது ஜனநாயக சீர்திருத்த அமைப்பு(ஏடிஆர்) இந்திய வாக்காளர்களிடம் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

சுமார் 17 தொகுதிகளைச் சேர்ந்த நட்சத்திர வேட்பாளர்களைக் கொண்ட தொகுதி மக்களிடம் ஏடிஆர் நடத்திய கருத்துக் கணிப்பில் வெறும் 2 எம்பிக்கள் மட்டுமே சராசரியை விட சற்று அதிகமான மதிப்பெண்ணை பெற்றுள்ளனர்.

மூன்று முக்கியப் பிரச்னைகள் குறித்து வாக்காளர்களிடம் கேள்வி எழுப்பிய ஏடிஆர், தொகுதியின் பிரச்னையை சரி செய்வதில் எம்பி எடுத்த நடவடிக்கைக்கு 5 மதிப்பெண்ணுக்கு எவ்வளவு மதிப்பெண் கொடுப்பீர்கள் என்றும் கேள்வி எழுப்பியது.

அதில் 3க்கும் குறைவாக மதிப்பெண் பெற்றால் அவர்கள் சராசரிக்கும் குறைவாக செயலாற்றியதையும், 3க்கு மேல் மதிப்பெண் எடுத்தால் சராசரியாக பணியாற்றியதையும், 1 மதிப்பெண் மிகவும் மோசம் என்பதையும் காட்டுகிறது.

17  பேரில் 4 பேர் மட்டுமே சராசரி மதிப்பெண்ணைப் பெற்றனர். நாக்பூரில் ஏற்பட்ட குடிநீர் பிரச்னையை சரி செய்த மத்திய இணை அமைச்சர் நிதின் கட்காரி சராசரிய விட அதிக மதிப்பெண் பெற்றுள்ளார்.

நான்டெட் தொகுதி காங்கிரஸ் எம்பி அஷோக் சவாக், வேலையின்மை பிரச்னையை திறமையாகக் கையாண்டதற்காக சராசரியை விட அதிக மதிப்பெண் பெற்றார்.

இவர்களைத் தவிர, வடக்கு பெங்களூரு சதானந்தா கௌடா மற்றும் குல்பர்கா தொகுதி எம்பி மல்லிகார்ஜூன கார்கே ஆகியோரும் சராசரியை விட சற்று அதிகப் புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.

இவர்களைத் தவிர மற்றவர்கள் சராசரியை விடக் குறைவானப் புள்ளிகளையைப் பெற்றுள்ளனர். எனவே, பிரபலமான நட்சத்திர வேட்பாளரா என்று தேர்வு செய்வதற்கு பதில், அவர் நம்ம தொகுதிக்கு நல்லதை செய்வாரா, அவரை எளிதில் அணுக முடியுமா? என்பதை அறிந்து வாக்களித்தால் நமக்கும் நமது தொகுதிக்கும் நன்மை பயக்கும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com