உங்கள் கையில் இருக்கும் 500 ரூபாய் நல்ல நோட்டா? 

500 ரூபாய் நோட்டுகளில் கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை 121% அதிகரித்திருப்பதாகவும், வங்கி முறைகேடுகள் 73.8% ஆக அதிகரித்திருப்பதாகவும் ரிவர்வ் வங்கியின் வருடாந்திர அறிக்கை கூறுகிறது.
உங்கள் கையில் இருக்கும் 500 ரூபாய் நல்ல நோட்டா? 

500 ரூபாய் நோட்டுகளில் கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை 121% அதிகரித்திருப்பதாகவும், வங்கி முறைகேடுகள் 73.8% ஆக அதிகரித்திருப்பதாகவும் ரிவர்வ் வங்கியின் வருடாந்திர அறிக்கை கூறுகிறது.

ரிசர்வ் வங்கியின் வருடாந்திர அறிக்கை நேற்று வெளியானது. அதில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் புழக்கம் குறைந்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு 6,72,600 கோடி ரூபாய் மதிப்புக்கு 2 ஆயிரம் நோட்டுகள் புழக்கத்தில் இருந்த நிலையில் தற்போது முடிந்த நிதியாண்டில் 6,58,200 கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. அதாவது 14,400 கோடி ரூபாய்க்கான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து மீண்டும் வங்கிகளுக்கே திரும்பிவிட்டன.

என்ன காரணத்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என கூறப்படவில்லை. அதேநேரத்தில் கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது 69 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டு 15 கோடியே 10 லட்சம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்ட நிலையில் தற்போது முடிந்த நிதியாண்டில் 4 கோடியே 70 லட்சம் நோட்டுகள் மட்டுமே அச்சிடப்பட்டுள்ளன.

இதே காலகட்டத்தில் 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் 21 புள்ளி 9 விழுக்காடு அதிகரித்துள்ளது. 500 ரூபாய் கள்ளநோட்டுகளின் எண்ணிக்கையோ அதிர்ச்சி தரும் வகையில் 121 விழுக்காடு அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. 

அது மட்டுமல்ல, வாடிக்கையாளர்களுக்குத் தெரியாமல் அவர்களது பணத்தி திருடும், வங்கி முறைகேடு 73 புள்ளி 8 விழுக்காடு அதிகரித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 2017 -18-ம் நிதியாண்டில் 41 ஆயிரத்து 167 கோடி ரூபாய்க்கு நடைபெற்ற வங்கி முறைகேடு தற்போது முடிந்த நிதியாண்டில் 71 கோடியே 542 கோடியாக அதிகரித்துள்ளது. 

இதில் பொதுத்துறை நிறுவனங்களில் மட்டும் 64 ஆயிரத்து 506 கோடி ரூபாய்க்கு மோசடி நடைபெற்றுள்ளது.

100 ரூபாய் நோட்டுகளின் ஆயுளை அதிகரிக்கும் வகையில் வார்னிஸ் அடித்த நோட்டுகளை சோதனை முறையில் வெளியிட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாகவும் ஆண்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இனி 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை கையில் வாங்கும் போது அது நல்ல நோட்டா என்று பார்த்து வாங்க வேண்டியது சாட்சாத் நம்ம கடமைதான்.. பார்த்துக் கொள்ளுங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com