சுடச்சுட

  
  water


  சென்னை: கடுமையான கோடை வர சராசரியாக இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கும் நிலையில், சென்னைவாசிகள் பலருக்கும் இந்த கஷ்டம் ஏற்கனவே வந்துவிட்டது.

  முக்கியமாக, மேற்கு மாம்பலம், தி.நகர், ராயப்பேட்டை, சூளைமேடு, ஆலந்தூர், வேளச்சேரியின் சில பகுதிகள், வளசரவாக்கம், சேத்துப்பட்டு, கொடுங்கையூர், அடையாறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளனர்.

  இந்த பகுதிகளுக்கு தினந்தோறும் 850 மில்லியன் லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. ஆனால் தற்போது இப்பகுதிகளுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் 480 - 550 மில்லியன் லிட்டர் குடிநீர் மட்டுமே வழங்கப்படுகிறது.  தேவைக்கும், வழங்கலுக்குமான இந்த இடைவெளி, இன்னும் கோடைக்காலம் நெருங்க நெருங்க அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.

  இதில் திருவல்லிக்கேணி, ஆழ்வார்பேட்டை, மேற்கு வேளச்சேரி பகுதிகள் ஒரு வாரத்துக்கும் மேல் குடிநீர் இல்லாமல் சமாளிக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

  இதற்குத் தீர்வு காண தமிழக அரசு ஏதேனும் திட்டத்தைக் கையில் வைத்துள்ளதா?

  அரசு வைத்திருக்கும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்படுவதால், உடனடியாக இந்த பிரச்னைக்கு சிக்கல் காண்பதிலும் தாமதம் ஏற்படுகிறது.

  அதாவது, மேலும் புதிய அணைக்கட்டுகளை உருவாக்குவது, கடல் நீரை குடிநீராக்கும் ஆலைகளை அமைக்கும் பணிகள் நத்தை வேதத்தில் நகர்ந்து வருகிறது.

  திருவள்ளூரில் உள்ள தேர்வாய் கண்டிகை அணைக்கட்டை விரிவாக்கம் செய்யும் பணிகள் 2016ம் ஆண்டு தொடங்கியது. இதற்காக நிலங்களை கைப்பற்றும் பணிகள் நடந்து, வேலைகள் முடிந்து, மழை நீரை சேமிக்கும் பணிக்குத் தயாராக அடுத்த ஆண்டு வடகிழக்குப் பருவ மழை வரைக் காத்திருக்க வேண்டும்.

  நெம்மேலியில் அதிக அளவில் குடிநீரை சுத்திகரிக்கும் ஆலை கட்டமைக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த ஆலை 2023ல்தான் செயல்படத் தொடங்கும் என்று மெட்ரோ குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  மேலும் ஒரு குடிநீர் சுத்திகரிப்பு ஆலை கட்டுமானப் பணிகள் நீதிமன்ற வழக்கினால் தடைபட்டுள்ளது. குடிநீர் பஞ்சத்தைப் போக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க மெட்ரோ குடிநீர் வாரியம் ரூ.122 கோடியை ஒதுக்கியுள்ளது. இதன் முலம் 171 புதிய ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் 423 கைப்பம்புகள் அமைக்க, 300 லாரிகளை வாடகைக்கு எடுக்கவும்,1,294 குடிநீர் தொட்டிகளை வாங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai