ப்ளஸ் டூ முடித்தபின் பிசியோதெரபி படிக்க விருப்பமா? இதோ விபரங்கள்!

மக்களுக்கு பொதுவான நோய் உபாதைகளுக்கு பொது மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுகின்றனர்.
ப்ளஸ் டூ முடித்தபின் பிசியோதெரபி படிக்க விருப்பமா? இதோ விபரங்கள்!

மக்களுக்கு பொதுவான நோய் உபாதைகளுக்கு பொது மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுகின்றனர்.  குறிப்பிட்ட சில நோய்களுக்கு அது சார்ந்த சிறப்பு மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுகின்றனர்.  உடலில் ஏற்படும் சில உடல் உபாதைகளுக்கு உடற்பயிற்சி சிகிச்சை தேவைப்படுகிறது.  அதற்கு அதில் சிறப்பு தேர்ச்சி பெற்ற நிபுணர்களிடம் சிகிச்சை பெற வேண்டியது அவசியமாகும்.  அத்தகைய சிறப்பு சிகிச்சை நிபுணர் பிசியோதெரபிஸ்ட் ஆவார். 

பிசியோதெரபிஸ்டாவதற்கு பிசியோதெரபி சம்பந்தமான படிப்பை படிக்க வேண்டும்.   தற்போது பலரால் வீடுகளில் உடற்பயிற்சி மேற்கொள்வது என்பது இயலாத காரியமாக கருதுகின்றனர்.  அதனால் பிசியோதெரபிஸ்டிடம் சென்று அதற்கான கருவிகளின் மூலம் உடற்பயிற்சி பெற்று அதன் மூலம் தங்களுடைய உடல் உபாதைகளுக்கு தீர்வு காண்கின்றனர்.  அதனால் பிசியோதெரபிஸ்ட்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளில் வேலை வாய்ப்பும், தனியாக பிசியோதெரபி சிகிச்சை மையங்களை துவங்கியும் வருவாய் ஈட்டலாம்.

பிசியோதெரபி சம்பந்தமான படிப்புகள்

    Bachelor of Physiotherapy - 4 ½ years
    Bachelor of Prosthetics and Orthotics - 4 ½ years.
    Diploma in Prosthetics and Orthotics - 2 years
    Diploma in Physiotherapy - 2 years

அடிப்படை கல்வித் தகுதி

    12-ம் வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் (அல்லது)
    இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் படித்திருக்க வேண்டும்.

தேர்வு முறை

1.    மத்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு - www.aiipmr.gov.in, www.muhs.ac.in, www.rehabcouncil.nic.in
2.    மாநில அளவில் மதிப்பெண் அடிப்படையில் பொது கலந்தாய்வு முறையில் – www.tnhealth.org.

பிசியோதெரபி கல்வியை வழங்கும் கல்வி நிறுவனங்கள்

1.    All India Institute of Physical Medicine and Rehabilitation,Mumbai. www.aiipmr.gov.in
2.    The Health Institution and Research Council of India, Delhi. www.herci.edu.in
3.    Government Institute of Rehabilitation Medicine, Chennai (Sub Centres- Thanjavur, Coimbatore, Cuddalore, Tirunelveli, Chennai, Salem and Madurai.
4.    Tamilnadu Dr. M.G.R. Medical University, Chennai.
5.    Tamilnadu Paramedical Institution College of Physiotherapy, Chennai.
6.    Government College of Physiotherapy, Trichy.


கல்வியின் பயன்பாடு

MPT போன்ற உயர் கல்வி பயிலலாம். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் Physiotherapist ஆக பணிவாய்ப்புகளைப் பெறலாம். சொந்தமாக இயன்முறை மருத்துவ சிகிச்சை மையம் அமைக்கலாம். அயல்நாட்டு வேலைவாய்ப்புகளைப் பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com