சுடச்சுட

  

  இந்த ஆண்டு 10 ஆம் வகுப்பு கணித வினாத்தாள் கடினமாக இருக்குமா? நூற்றுக்கு நூறு வாங்க இதோ ஒரு வழி!

  By E. ரவிச்சந்திரன் (ஓய்வு பெற்ற கணித ஆசிரியர்)  |   Published on : 07th March 2019 12:16 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Board-Exams_1

   

  இந்த ஆண்டு, 10-ம் வகுப்பு சமச்சீர் கணிதப் பாட வினாத்தாள் கடினமாக இருக்க வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

  கடந்த ஆண்டு நடைபெற்ற கணிதத் தேர்வில் பதினெட்டு மதிப்பெண்களுக்கு கிரியேட்டிவ் வினாக்கள் (Creative questions) கேட்கப்பட்டன! இதன் காரணமாக, நூற்றுக்கு நூறு எடுத்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

  (கிரியேட்டிவ் வினா என்பது, புத்தகத்தில் எந்த மூலையிலும், ஒரு நேரடி வினாவாக இல்லாமல், ஆனால் சிலபஸில் இருந்து கேட்கப்படும்  வினா ஆகும்).

  இந்த மாதம் 25-ம் தேதி நடைபெற உள்ள கணிதத் தேர்விலும் 20 மதிப்பெண்களுக்கு கிரியேட்டிவ் வினாக்கள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

  ஏனெனில், 9-ம் வகுப்பு வரை ‘புத்தகத்தில் இருக்கின்ற வினாக்களை மட்டுமே படித்து மதிப்பெண் பெறும் வழக்கத்தில் இருக்கும் நமது சமச்சீர் மாணவர்களில் பெரும்பாலானவர்கள், தேர்வின்போது கிரியேட்டிவ் வினாக்களை சிந்தித்து சரியான விடை எழுத இயலாமல் மதிப்பெண்களை இழக்கின்றனர்.

  * CHOICE என்பதே முற்றிலும் இல்லாத 15 ஒரு மார்க் கேள்விகளில் ஆறு அல்லது ஏழு கிரியேட்டிவ் வினாக்கள் கேட்கப்படும். இது below average, average, above average என அனைத்து தரப்பு மாணவர்களையும் நேரடியாகப் பாதிக்கும்.

  * மொத்தம் உள்ள 15-இல் 10 கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டும் என்று இருக்கின்ற ‘இரண்டு மார்க் கேள்விகளிலும்’ ஆறு அல்லது ஏழு கிரியேட்டிவ் வினாக்கள் கேட்கப்படும் சூழ்நிலை அனைத்துத் தரப்பு மாணவர்களையும் பாதிக்கும். கிரியேட்டிவ் வினாக்களுக்கு ஒரு குறிப்பிட்ட study material இல்லாத சூழ்நிலையில், புத்தகக்தில் நேரடி வினாவாக இல்லாத கேள்விகளை, தேர்வின்போது மாணவர்கள் குழப்பம் அடையாமல் சிந்தித்து, சரியான விடையைத் தெளிவோடு எழுதி நிச்சய மதிப்பெண்ணைப் பெறுவதில் மாணவர்களுக்குச் சிரமம் ஏற்படலாம். சென்ற கல்வி ஆண்டில் மாணவர்கள் செய்த அதே கற்றல் & கற்பித்தல் உழைப்பை மீண்டும் இந்த ஆண்டும் செய்வது கண்டிப்பாகப் போதாது. இந்தச் சூழ்நிலையில், மாணவர்கள் தங்களது கணிதப் பாடத்தில் நூற்றுக்கு நூறு வாங்கும் மன உறுதியையும், சராசரிக்கும் குறைவான மாணவர்களைத்  தேர்ச்சி பெறச் செய்யும் வகையிலுமான மன உறுதியையும் அதிகமாக்கிக்கொள்ள, கிரியேட்டிவ் வினாக்களுக்கு ஒரு study material அவசியமாக உள்ளது.

  அந்த நோக்கத்தில், மாணவர்களின் நலனுக்காக உருவாக்கப்பட்டதுதான் இந்த கிரியேட்டிவ் மெட்டீரியல்.

  கிரியேட்டிவ் ஸ்டடி மெட்டீரியல் கம் 10 ஆம் வகுப்பு வினா, விடை வங்கியைப் பெற இங்கு கிளிக் செய்யவும்.

  கட்டுரையாசிரியர் E.ரவிச்சந்திரன் M.Sc., B.Ed.

  ஓய்வுபெற்ற கணித ஆசிரியர் என்ற  முறையில், பத்தாம் வகுப்பு சமச்சீர் கல்வித் திட்ட கணிதப் பாடப் புத்தகம் முழுவதையும் அலசி, பொதுத் தேர்வில் கேட்கப்படும் சாத்தியக்கூறுகள் அதிகம் இருக்கக்கூடிய 500-க்கும் மேற்பட்ட கிரியேட்டிவ் வினாக்கள், அவற்றுக்கான விடைகள் மற்றும் விளக்கங்களைத் தொகுத்துக் கொடுத்துள்ளேன்.

  இதைப் படிக்கும் கணித ஆசிரியர்கள், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு இந்தக் கட்டுரையின் லிங்க்கை எஸ்.எம்.எஸ். செய்து கிரியேட்டிவ் வினா-விடையைப் படித்துப் பயன்பெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  மாணவர்கள் தாமாகவே படித்துப் புரிந்துகொள்ளும் வகையில் விளக்கங்களைக் உள்ளடக்கிய இந்தக் கேள்விகள், நிச்சயம் அனைத்து வகையான மாணவர்களுக்கும் நல்ல பலனைத் தரும் என்று எதிர்பார்க்கிறேன். இந்த ஆண்டு 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிக் கொண்டிருக்கும் மாணவர்கள் அனைவரும் கணிதத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற வாழ்த்துகள்.

  நன்றி.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai