முகப்பு கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள்
வேட்பாளர்களின் மீதான 'அதிதீவிர' கிரிமினல் வழக்கு: ஏடிஆர் ஆய்வறிக்கை வெளியீடு
By | Published On : 15th May 2019 04:15 PM | Last Updated : 15th May 2019 04:15 PM | அ+அ அ- |

2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 7,928 வேட்பாளர்களில் 1,500 (19%) பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளது. அவர்களில் 1,070 (13%) பேர் மீது பாலியல் வன்கொடுமை, கொலை, கொலை முயற்சி, கடத்தல் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் உட்பட பல்வேறு அதிதீவிர கிரிமினல் வழக்குகள் உள்ளன.
கடந்த 2009, 2014 மற்றும் 2019 ஆகிய மக்களவைத் தேர்தல்களின் போது வேட்பாளர்கள் மீதான கிரிமினல் குற்றச்சாட்டு தொடர்பான புள்ளிவிவரம்
இவர்களில் 56 பேர் மீது இதர கிரிமினல் வழக்குகளும், 55 பேர் மீது கொலை வழக்கும், 184 பேர் மீது கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
9 வேட்பாளர்கள் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு உட்பட 126 வேட்பாளர்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த 2009, 2014 மற்றும் 2019 ஆகிய மக்களவைத் தேர்தல்களில் கட்சி ரீதியாக கிரிமினல் வழக்குகள் உள்ள வேட்பாளர்கள்
47 வேட்பாளர் மீது கடத்தல் மற்றும் 95 வேட்பாளர்கள் மீது வெறுப்பு அரசியல் பிரசாரங்களில் ஈடுபட்டது தொடர்பான வழக்குகள் உள்ளது.
நாடு முழுவதும் 433 பாஜக வேட்பாளர்களில் 124 (29%) பேர் மீதும், 419 காங்கிரஸ் வேட்பாளர்களில் 107 (26%) பேர் மீதும், பகுஜன் சமாஜ் கட்சியின் 381 வேட்பாளர்களில் 61 (16%) பேர் மீதும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 69 வேட்பாளர்களில் 40 (58%) பேர் மீதும் அதிதீவிர கிரிமினல் வழக்குகள் உள்ளன.
கட்சி ரீதியிலான கிரிமினல் குற்றச்சாட்டு வழக்குகளின் நிலவரம்
தமிழகத்தில் 13 சதவீத வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. நாடு முழுவதும் உள்ள 265 (49%) மக்களவைத் தொகுதிகளில் 3-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மாநில ரீதியாக வேட்பாளர்களின் கிரிமினல் வழக்குகளின் புள்ளி விவரம்