கருப்பு என்று வெறுப்பை கொட்டியவர்களுக்கு நெருப்பாய் பதிலடி தந்த பிரபல மாடல்!

புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளர் சபியா சாச்சியின் மாடலாக ஆவதற்கு முன்னால் வர்ஷிதா ததாவர்த்தி
கருப்பு என்று வெறுப்பை கொட்டியவர்களுக்கு நெருப்பாய் பதிலடி தந்த பிரபல மாடல்!

புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளர் சபியா சாச்சியின் மாடலாக ஆவதற்கு முன்னால் வர்ஷிதா ததாவர்த்தி பல விமரினங்களை கடந்துதான் வெற்றி பெற்றுள்ளார்.

அழகு குறித்த தேய்வழக்குகளைத் தகர்த்து அவர் பேசியது, 'நான் முதலில் குண்டாகத்தான் இருந்தேன், ஆனால் 15 கிலோ எடையைக் குறைத்து, மாடல் ஏஜென்சிகளுக்கு தருவதற்கு புகைப்பட ஆல்பமொன்றை உருவாக்கினேன். என்னுடைய உடல்வாகு மாடலிங் செய்வதற்கு ஏற்றதல்ல என்று எப்போதும் என்னிடம் கூறி வந்தார்கள்’ என்றார் இந்த 25 வயது மணிப்பால் ஊடகப் பட்டதாரி.

இந்த தடைகள் அவருக்கு சோர்வை ஏற்படுத்தவில்லை. திரைப்படங்களில் தனது அதிர்ஷ்டத்தை முயற்சிக்க ஹைதராபாத் சென்றார். விசாகப்பட்டினத்தில் பிறந்து தில்லியில் வளர்ந்த அவர் கூறுகையில், 'எந்த இயக்குனரும் எனக்கு வாய்ப்பு தர விரும்பவில்லை. காரணம் என்னுடைய முகம் தென்னிந்தியப் பெண் போல இருந்தது என்பதுதான். மணி ரத்னத்தின் திரைப்படங்கள் மீதான அவரது காதல் அவளை சென்னைக்கு அழைத்துச் சென்றது, ஆனால் அதுவும் ஒரு ஏமாற்றமாகத்தான் மாறியது.

சப்யா சாச்சியின் நகைக் கண்காட்சிக்கு ஒரு நண்பர் அழைத்த போதுதான் வர்ஷிதாவின் வாழ்க்கை ஒரு திருப்புமுனையை சந்தித்தது. 'சில நகைகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சப்யா சாச்சியும் அங்கே இருப்பதைப் பார்த்து உடனே அவரை அணுகி  நான் உங்களுடைய பெரிய ரசிகை என்று கூறி,  அவருடன் ஒரு செல்ஃபி கிளிக் செய்தேன். பின்னர் அந்தப் படத்தை என்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டேன். "

'இரண்டு மாதங்களுக்குப் பிறகு, சப்யா சாச்சியின் குழு உறுப்பினர் ஒருவர் என்னைத் தொடர்பு கொண்டு, ஒரு படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியுமா என்று என்னைக் கேட்டார்’

வர்ஷிதாவைப் பொறுத்தவரை, அன்றிலிருந்து அவரது வாழ்க்கை வேறு திசையில் பயணிக்கத் தொடங்கி விட்டது. சப்யா டிசைன் செய்த ஆடைகளில் கறுத்த நிறமுடைய ஒரு பெண்ணைப் பார்ப்பது அனேகருக்கு நம்பிக்கையைத் தந்தது. இதை விடவும் எதுவும் என்னை மகிழ்ச்சியடையச் செய்திருக்க முடியாது என்றார் வர்ஷிதா. உலகெங்கிலும் உள்ள பெண்களிடமிருந்து வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளது. வர்ஷிதாவின் தன்னம்பிக்கை தங்களும் ஏற்படுகிறது என்று அவர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர். 

அழகுக்கான சில வழக்கமான இலக்கண விதிமுறைகளை மீறுவது பற்றி பேசுகையில், 'நான் 90-களின் குழந்தை. கருப்பு நிறமுடன் இருப்பது நல்லது என்று என்னிடம் யாரும் சொல்லவில்லை.அதனால்தான் அழகு சாதனப் பொருட்கள், ஃபேர்னெஸ் க்ரீம்கள் எல்லாம் இந்தியாவில் அதிகமாக விற்பனையாகிறது. உங்கள் நிறத்தை மாற்றுவது என்பது உங்கள் தலைமுடிக்கு சாயம் போடுவது போன்றதல்ல. பெண்கள் தங்களிடம் இருப்பதை வைத்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ”

சில நாட்கள் பெங்களூரில் இருந்த, வர்ஷிதாவுக்கு பழைய நினைவுகள் வந்தன என்றார். கன்னட படத்தில் நடிக்க முயற்சித்தபோது நான் பெங்களூரில் வசித்தேன். இது நிறைய நினைவுகளைத் தருகிறது’ என்கிறார். தற்போது இவர் ஒரு மகிழ்ச்சியான மாடல். திரையுலகிலும் கால் பதிக்க சரியான வாய்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் வர்ஷிதா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com