கருக்கலைப்புக்காக 3 ஆண்டுகளில் நீதிமன்றக் கதவைத் தட்டிய 200 பேர்: பெரும்பாலானோர் யார் தெரியுமா?

கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் கருக்கலைப்பு செய்து கொள்ள அனுமதி கேட்டு நீதிமன்றத்தின் கதவைத் தட்டிய பெண்களின் எண்ணிக்கை 200 என்று புள்ளி விவரம் காட்டுகிறது.
கருக்கலைப்புக்காக 3 ஆண்டுகளில் நீதிமன்றக் கதவைத் தட்டிய 200 பேர்: பெரும்பாலானோர் யார் தெரியுமா?


புது தில்லி: கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் கருக்கலைப்பு செய்து கொள்ள அனுமதி கேட்டு நீதிமன்றத்தின் கதவைத் தட்டிய பெண்களின் எண்ணிக்கை 200 என்று புள்ளி விவரம் காட்டுகிறது.

உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் கடந்த 3 ஆண்டுகளில் கருக்கலைப்பு செய்து கொள்ள அனுமதி கோரிய 194 ரிட் மனுக்களில், பெரும்பாலான பெண்கள் பலாத்காரத்துக்கு உள்ளானவர்களாக இருப்பதுதான் இந்திய திருநாட்டில் வெட்கப்பட வேண்டிய விஷயம்.

இது குறித்து ஆய்வு நடத்திய பிரதிக்யா கமோர் பாலின சமன் மற்றும் பாதுகாப்பான கருக்கலைப்பு அமைப்பு, 2016 ஜூன் மாதம் முதல் 2019 ஏப்ரல் மாதம் வரை  உச்ச நீதிமன்றத்தில் 21 ரிட் மனுக்கள் உட்பட உயர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்கள் உட்பட 194 பெண்கள் நீதிமன்றத்தின் கதவை தட்டியுள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தில் தாக்கலான அனைத்து ரிட் மனுக்களுமே 20 வாரத்துக்கும் மேலான கருவை கலைப்பதற்காக தாக்கல் செய்யப்பட்டவையே. இதில் 5 மனுக்கள் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுடையதும், 15 பெண்கள், கருவின் வளர்ச்சி சரியில்லாததால் கருக்கலைப்புக்கு அனுமதி கோரிய மனுக்களுமாக இருந்தன. இதில் 5 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன, 15 மனுக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டன.

அனுமதி மறுக்கப்பட்ட 5 மனுக்களில் தொடர்புடைய பெண்களுக்கு 26-28 வாரக் கரு இருந்ததால் கருக்கலைப்பு செய்தால் பெண்களின் உயிருக்கே அச்சுறுத்தல் ஏற்படும் என்பதால் மனு மீது அனுமதி அளிக்க மறுத்துவிட்டது.

20 வாரத்துக்கு உள்ளான கருவைக் கலைக்க மட்டுமே மருத்துவ கருக்கலைப்பு விதி அனுமதி வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் சில குறிப்பிடத்தக்க விஷயங்கள் என்னவென்றால்..

  • உச்ச நீதிமன்றத்தில் 21 மனுக்களும், உயர் நீதிமன்றங்களில் 173 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
  • உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் 139 பேருக்கு கருக்கலைப்புக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் 29 பெண்களுக்கு கருக்கலைப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
  • மும்பை உயர் நீதிமன்றத்தில்தான் அதிகபட்ச மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
  • அதிகபட்ச மனுக்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டவை.
     

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com