விருதுக்கு பெருமை சேர்த்த 89 வயது எழுத்தாளர்!

மார்கரெட் அட்வுட் மற்றும் பெர்னார்டின் எவரிஸ்டோ ஆகியோர் திங்கள் அன்று (14 அக்டோபர்) 2019-ம் ஆண்டுக்கான புக்கர் பரிசை வென்றனர்.
Margaret Atwood and Bernardine Evaristo Share the 2019 Booker Prize
Margaret Atwood and Bernardine Evaristo Share the 2019 Booker Prize

மார்கரெட் அட்வுட் மற்றும் பெர்னார்டின் எவரிஸ்டோ ஆகியோர் திங்கள் அன்று (14 அக்டோபர்) 2019-ம் ஆண்டுக்கான புக்கர் பரிசை வென்றனர்.

பரிசுக்கு பட்டியலிடப்பட்ட ஆறு புத்தகங்களில் ஒன்று பிரிட்டிஷ் இந்திய நாவலாசிரியர் சல்மான் ருஷ்டியின் நாவல் 'குயிச்சோட்' ஒன்றாகும்.

புக்கர் விதிகள் பரிசைப் பிரிக்கக் கூடாது என்று கூறுகின்றன, ஆனால் நீதிபதிகள் அட்வூட்டின் 'தி டெஸ்டமென்ட்' மற்றும் பெர்னார்டின் எவரொஸ்டோவின் 'கேர்ள், வுமன், அதர்'  இவை இரண்டையும் 'பிரிக்க முடியாது’ என்று வலியுறுத்தினர். இந்த மதிப்புமிக்க விருதை வென்ற முதல் கறுப்பின பெண் எவரிஸ்டோ என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் 1992-இல் தான் இருவருக்கு இதே போன்று பரிசு பகிர்ந்து வழங்கப்பட்டது. அதற்குப் பின் விதிகள் மாற்றப்பட்டன. மேலும் இரண்டு வெற்றியாளர்களைத் தேர்வு செய்ய அனுமதிக்கப்படவில்லை என்று அமைப்பாளர்கள் இந்த ஆண்டு நீதிபதிகளிடம் தெரிவித்தனர். ஆனால் ஐந்து மணிநேர கலந்துரையாடல்களுக்குப் பிறகு, ஐந்து பேர் கொண்ட தீர்ப்புக் குழுவின் தலைவரான பீட்டர் புளோரன்ஸ் கூறினார்: 'விதிகளை மீறுவதுதான் எங்கள் முடிவு.’

கில்ட்ஹாலில் நடந்த இக்கண்காட்சி விழாவில் 50,000 பவுண்டுகள் விருதை ஆசிரியர்கள் இருவருக்கும் பிரித்தளிக்க வேண்டும் என்று அவர்கள் பரிந்துரைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். 

எழுபத்தொன்பது வயதான கனடாவைச் சேர்ந்த எழுத்தாளர் மார்கரெட் அட்வுட், இளைய எழுத்தாளர் ஒருவருடன் இவ்விருதைப் பகிர்வதில் மகிழ்ச்சி என்று தெரிவித்தார். அட்வுட் தனது இணை வெற்றியாளரிடம் கேலி செய்தார்: "நான் மிகவும் முதியவளாக இருப்பதால் எனக்கு எந்தவித கவனம் தேவையில்லை, எனவே நீங்கள் சிலவற்றைப் பெறுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.’ என்றார். 'இங்கே தனியாக இருந்திருந்தால் எனக்கு மிகவும் சங்கடமாக இருந்திருக்கும், எனவே நீங்களும் இங்கே இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்,’என்று அவர் கூறினார்.

எவரிஸ்டோ மேலும் கூறினார், 'கறுப்பின பிரிட்டிஷ் பெண்களுக்கு தெரியும், இலக்கியத்தில் நம்மை நாமே எழுதவில்லை என்றால் வேறு யாரும் மாட்டார்கள்’ மேலும் இதைப் போன்றதொரு பெருமையை மார்கரெட் அட்வுட் உடன் இதைப் பகிர்ந்து கொள்வது மிகவும் நம்பமுடியாதது’ என்றார் இந்த 60 வயது எழுத்தாளர்.

அக்டோபர் 2018 முதல் செப்டம்பர் 2019 வரை இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் வெளியிடப்பட்ட 151 புத்தகங்களிலிருந்து 2019-ம் ஆண்டுக்கான மான் புக்கர் விருதுக்கான புத்தகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது.

ஐந்தாவது முறையாக மும்பையில் சல்மான் ருஷ்டி இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டார், இதில் 1981-ம் ஆண்டு 'மிட்நைட்ஸ் சில்ட்ரன்' நாவலுக்காக புக்கர் விருதைப் பெற்றார்.

ருஷ்டியின் சமீபத்திய படைப்பு 16-ஆம் நூற்றாண்டின் ஸ்பானிஷ் எழுத்தாளர் மிகுவல் டி செர்வாண்டஸின் கிளாசிக் நாவலான 'டான் குயிக்சோட்' ஆல் ஈர்க்கப்பட்டதால் எழுதப்பட்டது.

இந்த ஆண்டு விழா நிறுவனர், இயக்குனர் மற்றும் புக்கர் பரிசு தீர்ப்புக் குழுவின் தலைவரான புளோரன்ஸ் கூறுகையில், 'இந்தப் புத்தகங்கள் ஒவ்வொன்றின் அசாதாரண லட்சியத்திற்கான எங்கள் பாராட்டுகள்’. நகைச்சுவை, அரசியல் மற்றும் கலாச்சார ஈடுபாடு, துணிச்சலான மற்றும் வியக்க வைக்கும் மொழியின் அழகு ஏராளமாக உள்ளது’ என்று அவர் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், 'இந்த ஆறு புத்தகங்களையும் படிக்கும் எவரும் வாசிப்பனுபவத்தால் மகிழ்ச்சியடைவார்கள், கதையின் சக்தியால் பிரமிப்பார்கள், நம் கற்பனைகளை விடுவிக்க இலக்கியம் என்ன செய்ய முடியும் என்பதற்கான பதில் இவற்றில் உள்ளது’ என்ற் மனம் திறந்து பாராட்டினார்.

பட்டியலிடப்பட்ட ஒவ்வொரு எழுத்தாளர்களும் 2,500 பவுண்டுகள் மற்றும் அவர்களின் புத்தகத்தின் பிரத்யேக பதிப்பைப் பெற்றனர். கடந்த ஆண்டு இப்பரிசை வென்றவர் வடக்கு ஐரிஷ் எழுத்தாளர் அன்னா பர்ன்ஸ் ஃபார் மில்க்மேன். அவருடைய புத்தகம் விருதுக்குப் பின்னர் சுமார் 546,500 பிரதிகள் விற்றுத் தீர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com