Enable Javscript for better performance
tamil netizens|தமிழரின் கலாசாரத்தில் அதிகாரத்தின்  அடையாளமாக இருந்திருக்குமா?- Dinamani

சுடச்சுட

  

  தமிழரின் கலாசாரத்தில் அதிகாரத்தின்  அடையாளமாக இருந்திருக்குமா?

  Published on : 15th October 2019 02:42 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  graveyard

  முக நூலிலிருந்து....

  ஓடி வருகிற பெருநதியொன்றைக்  காலால் எட்டி உதைக்கிறான். 
  மணல்களும்,  கூழாங்கற்களுமென சிதற,  
  இப்போது  பள்ளங்களும் பாறைகளுமென  இருக்கிறது. 
  நதி  அமைதியாய் இருக்கிறது என  இறங்கி விடாதீர்கள்.  
  எட்டி உதைத்தவனுக்கென
  புதைமணலுடன் காத்திருக்கிறது!

  வதிலை பிரபா

  மருத்துவமனை வளாகத்தைக் கூட,
  விளையாட்டு மைதானமாக மாற்றும் வித்தை...
  மழலைகளுக்கு மட்டுமே சாத்தியம். 

  கிரிதரன்

  சாக்கடையோரம் ஓர் அழுக்கடைந்த
  பொம்மையைப்போல் நிற்கிறது...
  நீரிருந்தால் மீனிருக்கும் என ஏமாந்த கொக்கு.

  காமராஜ் எம்.ராதாகிருஷ்ணன்

  பின்னால் பேசுபவன்
  புகழ்ந்து பேசினால் என்ன...
  இகழ்ந்து பேசினால் என்ன...
  காதில் வாங்காமல்
  அடுத்த அடி எடுத்து வைத்து
  முன்னேறிக் கொண்டே இரு.

  மாரியப்பன்

  எனக்கான முகத்தினை இங்கே தேடாதீர்கள்~   
  அது பல முகமுடிகளை அணிந்து 
  எனக்கான தோற்றத்தினைத்  தந்து கொண்டிருக்கும்.

  நாகசோதி நாகமணி

  சுட்டுரையிலிருந்து...

  ஒரு புத்தகத்தை  வாசிக்கிற போது
  ஒரு உரையைக் கேட்கிற போது
  ஒரு பாடலை ரசிக்கிற போது
  உள்ளிருந்து நாம் தேடுவது...
  நம் சொந்த முகங்களைத்தானே?
  அந்தப் பாடலின் எந்த வரியாக  நாம் இருக்கின்றோம்?
  அந்த உரையில் எந்த இடம்  நமக்கானதாய் இருக்கிறது?
  அந்தப் புத்தகம் எந்த நினைவைக்  கிளறிவிடுகிறது?

  நஸ்ரின் நர்கீஸ்

  கானகத்துப் பூவினை கிழித்துச் செல்லும் ரேகையாய்ப் பாதை!

  காஞ்சிபுரத்தான்

  அடுத்த ஜென்மம்னு ஒன்னு இருந்தால்...
  "நீயெல்லாம் ஒரு ஜென்மமா'ன்னு 
  யாரும் கேட்காத மாதிரி வாழணும்.

  ரோசாப்பூ தையல்காரன்


  வலைதளத்திலிருந்து...

  கல்லறைகள் தமிழரின் கலாசாரத்தில் அதிகாரத்தின்  அடையாளமாக இருந்திருக்குமா?  

  எகிப்தின் பிரமிடுகள் அரச வம்சத்தின் கல்லறைகள். ஆனால் கல்லணை கட்டிய கரிகாலனுக்கு  ஏன் தனக்கு ஓர்  அழியாத கல்லறை கட்ட வேண்டும்  என்று தோன்றவில்லை?  பெருவுடையார் கோவிலைக் கட்டிய தஞ்சை ராஜ ராஜ சோழனுக்கு கல்லறை இருக்கிறதா? இருப்பதாக அடிக்கடி யூ டியூப்பில் வெளிவரும்  செய்திகள் கூட எந்த அளவுக்கு ஆதாரபூர்வமானவை  என்ற கேள்வி எழுகிறது. தமிழகத்தை ஆண்ட மூவேந்தருக்கும் கல்லறைகள் இல்லை  என்பது மட்டுமல்ல, அரண்மனைகளும் இல்லை. 

  வட இந்தியாவில் ஜெய்ப்பூர் போன்ற பகுதிகளில் வாழ்ந்த  அரசர்களின் அரண்மனைகள் இப்போதும்   பளிங்குக் கற்களில் ஜொலிக்கின்றன.  இந்தி திரைப்படங்களின் கனவு காட்சிகளுக்கும்  காதல் டூயட்டுகளுக்கும் அந்த அரண்மனைகள்   பெரிதும் பயன்படுகின்றன.

  உலக அதிசயமான தாஜ்மஹால் ஒரு கல்லறைதான் என்பது நாம் அறியாத செய்தி அல்ல.  கல்லறை கலாச்சாரம் என்பது எப்போது ஏற்பட்டது? கல்லறை கட்டுவது என்பது அந்த குறிப்பிட்ட ஆளுமையைக் கொண்டாடுவது என்பதும்  அவருடைய முக்கியத்துவத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வது என்பதும் கூட   ரொம்பவும் மேம்போக்கானது.  ஒரு வகையில் இவை எல்லாமே ஆளுமைகளை அடையாள அரசியலுக்குள்  அடக்கி முடக்கிப் போடும் வித்தை.
  http://puthiyamaadhavi.blogspot.com

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai