இந்தியத் தாமிரத் தொழில் போக்கும் பார்வையும் 2019 செப்டம்பர் மதிப்பீட்டு அறிக்கை

தாமிரத் தொழில் ஒட்டுமொத்த விற்பனை வருமானம் 2015-19 நிதியாண்டின் போது 6.6% குறைந்துவிட்டது.
இந்தியத் தாமிரத் தொழில் போக்கும் பார்வையும் 2019 செப்டம்பர் மதிப்பீட்டு அறிக்கை

தாமிரம் என்பது, இரும்பு அல்லாத ஒரு முக்கியமான உலோகம் ஆகும். இது மிகப் பரவலாகப் பல்வேறு தொழில்முறைச் செயல்பாடுகளில் இடம் பெறுகிறது. பயன்படுத்தப்படும் அளவுகளின் கணக்கில் இன்று எஃகு மற்றும் அலுமினியத்திற்கு அடுத்தபடியாக 3-வது இடத்தை இது வகிக்கிறது.

இந்தியாவில் மிகக் குறைந்த அளவே தாமிரத் தாது உள்ளது. உலக அளவில் உள்ள தாமிர இருப்புகளில் இது சுமார் 2% அளவே ஆகும். சுரங்கத் தொழில் உற்பத்தியும் உலக அளவுடன் ஒப்பிடுகையில் 0.2% அளவே ஆகும்.

சுத்திகரிக்கப்பட்ட தாமிரத்தின் பயன்பாடு (இரண்டாம் நிலைப் பயன்பாடு உள்பட
2015-19 நிதியாண்டில் 4.2% அளவு வளர்ந்துள்ளது. இந்தியச் சந்தையில் முதன்மையான தாமிரத் தொழிலில் பெரும் பங்கு வகிப்பவை மூன்று பெரிய பங்கு வகிப்பவை மூன்று பெரிய அமைப்புகள் ஆகும். பொதுதுறையில் இந்துஸ்தான் காப்பர் லிமிடெட், தனியார் துறையில் ஹிண்டால்கோ லிமிடெட் மற்றும் வேதாந்தா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட். சுத்திகரிக்கப்பட்ட தாமிரத்தின் உள்நாட்டு உற்பத்தி 2014-18 நிதியாண்டின் போது 9.6% அளவு வளர்ந்துள்ளது.

2018 மே மாதம் 28ம் தேதியன்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிரத் தொழிற்சாலை நிரந்தரமாக மூடப்பட்டதன் காரணமாக 2019 நிதியாண்டின் போது உற்பத்தி 46.1% அளவு வீழ்ந்துவிட்டது. தூத்துக்குடியில் உள்ள உருக்காலை, நம் நாட்டில் தாமிரம் உருக்கி எடுக்கும் அளவுத் திறனில் 40% ஆகும். 2018 நிதியாண்டு வரை தாமிரக் கேத்தோடுகளின் நிகர உற்பத்தியாளராக இந்தியா இருந்து வந்தது. தூத்துக்குடி ஸ்மெல்ட்டர் ஆலை மூடப்பட்டதால் உள்நாட்டு உற்பத்து வீழ்ச்சி அடைந்து, அதன் விளைவாக நாட்டின் இறக்குமதிகள் உயர்ந்தும் ஏற்றுமதிகள் குறைந்தும் போய்விட்டன, 18 ஆண்டுகளுக்குப் பிறகு சுத்திகரிக்கப்பட்ட தாமிரத்தை இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா ஆகிவிட்டது. தாமிரக் கேத்தோடுகளின் இறக்குமதி 82.6% அதிகமாகி, ஏற்றுமதி 72.7% அளவுக்கு விழ்ந்துவிட்டன. இந்தியா தாமிரத்தை 86% ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்கிறது. சீனாவுக்கு 83% ஏற்றுமதி செய்கிறது.

தாமிரத் தொழில் ஒட்டுமொத்த விற்பனை வருமானம் 2015-19 நிதியாண்டின் போது 6.6% குறைந்துவிட்டது. தூத்துக்குடி ஸ்மெல்ட்டர் ஆலை மூடப்பட்டதால் 2019 நிதியாண்டின் போது வருமானம்32.1% வீழ்ச்சி அடைந்தது. நடப்பு நிதியாண்டிலும் வருமானம் 32.1% வீழ்ச்சி அடைந்தது. நடப்பு நிதியாண்டிலும் வருமானம் 17.3% அளவு குறையும். 2019 நிதியாண்டின் போது ஏற்றுமதிகள் 87.4% அளவு குறைந்துவிட்டன. ஆனால் இறக்குமதிகள் 131.2% அதிகரித்துவிட்டன. (2018 நிதியாண்டின் போது இறக்குமதிகள் 35.6% அதிகரித்தன) 2019 நிதியாண்டின் போது சுத்திகரிக்கப்பட்ட தாமிரத்தை இந்தியா ஜப்பான் (71%) காங்கோ (6%), சிங்கப்பூர் (5%), சிலி (4%), டாஞ்ஜானியா(4%), ஐக்கிய அரபுக் குடியரசுகள் (4%) மற்றும் தென் ஆப்பிரிக்கா (3%) இறக்குமதி செய்தது. சீனா (75%), தைவான் (13%), மலேசியா(5%), தென் கொரியா (5%), மற்றும் வங்காள தேசம் (2%) நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com