முகப்பு கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள்
தங்க செயினை விழுங்கிய மாடு..! கழிவு வழியாக வரும் என 3 நாட்களாக காத்திருக்கும் குடும்பம்
By C.P.சரவணன், வழக்குரைஞர் | Published On : 24th October 2019 04:58 PM | Last Updated : 24th October 2019 06:32 PM | அ+அ அ- |

Haryana: the cow who swallowed gold chain
ஹரியானா மாநிலத்தில் ஒரு வீட்டில் உள்ள பெண்ணின் தங்க செயினை மாடு விழுங்கியதால் அந்த செயின் மட்டின் கழிவு வழியாக வரும் என ஒரு குடும்பத்தினர் 3 நாட்களாக காத்திருக்கின்றனர்.
ஹரியானா மாநிலம் ஹிஸார் மாவட்டத்தை, சிஸ்ரா நகரத்தின் அருகில் காலன்வாலி என்ற கிராமம் இருக்கிறது. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ஜனக் ராஜ். இவர் மனைவி ஒரு திருமண விழாவிற்குச் சென்றுள்ளார்.
திருமண விழாவிலிருந்து திரும்ப வர தாமதம் ஆகியதால் வீட்டில் அவசர அவசரமாக உடைகள் எதையும் மாற்றாமல் சமையல் வேலையைச் செய்துள்ளார். அப்பொழுது காய்கறி நறுக்கும்போது அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலி இடைஞ்சலாக இருந்ததால் அதை அருகிலிருந்த காய்கறி பெட்டியில் கழட்டி வைத்து விட்டு விறுவிறுவென சமையல் வேலைகளைச் செய்தார்.
ஒரு வழியாகச் சமையல் வேலையை முடித்துவிட்டு கிச்சனை கிளின் செய்யும் போது, காய்கறி பெட்டியில் தங்க செயினை வைத்ததை மறந்து அதில் காய்கறி கழிவுகளைக் கொட்டி அவர்கள் வீட்டு பின்னால் இருக்கும் மாட்டு தீவன பெட்டியிலும் போட்டுவிட்டார்.
வெகு நேரம் கழித்துத் தான் அவருக்கு தனது தங்க செயினை காய்கறி பெட்டியில் வைத்தது நினைவிற்கு வந்தது. அதன் பின் அதை மாட்டு தீவின பெட்டியில் கொட்டியதை அறிந்து அதில் சென்று பார்த்தபோது தங்க செயினை காணவில்லை.
இதையடுத்து இந்த விஷயத்தை அவர் தனது கணவரிடம் கூறினார். தங்க செயின் எங்கே சென்றிருக்கும் என அவர் மாட்டுக் கொட்டகையில் உள்ள சிசிடிவி காட்சிகளைப் பார்த்தபோது அதை மாடு மாட்டுத் தீவனத்துடன் சேர்த்துச் சாப்பிட்டது பதிவாகியிருந்தது.
மாடு சாப்பிட்ட அந்த தங்க செயின் சுமார் 30 கிராம் எடை கொண்டதாகும் அதன் மதிப்பு மார்கெட்டில் ரூ1.18 லட்சம். இந்நிலையில் மாட்டிற்கு தீவனம் கொடுத்தால் அதன் கழிவில் தங்க செயின் வந்துவிடும் என நினைத்து அவர்கள் கடந்த 3 நாட்களாக மாட்டிற்குத் தீவனம் வழங்கியுள்ளனர். ஆனால் சங்கிலி வந்தபாடில்லை.
இதையடுத்து அவர்கள் கால்நடை மருத்துவரை அணுகியபோது அவர் ஆப்ரேஷன் செய்து மாட்டின் வயிற்றில் உள்ள செயினை அகற்றவேண்டும் ஆனால் அவ்வாறு செய்வதால் மாட்டின் உயிருக்குக் கூட ஆபத்து இருக்கிறது என மருத்துவர்கள் சொன்னார்கள்.
இதையடுத்து தற்போது அந்த குடும்பம் தொடர்ந்து மாட்டின் கழிவிலேயே செயினை தேட முடிவு செய்துள்ளது. செயினிற்காக மாட்டிற்கு ஆப்ரேஷன் செய்து அதனால் அந்த மாட்டிற்கு உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் தங்களால் தங்கிக்கொள்ள முடியாது என அந்த குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.