ஜெயலலிதா பெயரில் படப்பிடிப்புத் தளம்: ஆர்.கே. செல்வமணியிடம் ரூ.1 கோடி வழங்கினார் முதல்வர் பழனிசாமி

ஜெயலலிதா பெயரில் படப்பிடிப்புத் தளம்: ஆர்.கே. செல்வமணியிடம் ரூ.1 கோடி வழங்கினார் முதல்வர் பழனிசாமி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் படப்பிடிப்புத் தளம் அமைக்க,  தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே. செல்வமணியிடம் ரூ.1 கோடி வழங்கினார் முதல்வர் பழனிசாமி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் படப்பிடிப்புத் தளம் அமைக்க,  தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே. செல்வமணியிடம் ரூ.1 கோடி வழங்கினார் முதல்வர் பழனிசாமி

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், தமிழக முதல்வர் பழனிசாமி இன்று (16.9.2019) தலைமைச் செயலகத்தில், காஞ்சிபுரம் மாவட்டம், பையனூரில் உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்பு தளத்தின் அருகில் “மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா” படப்பிடிப்பு தளம் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே. செல்வமணி அவர்களிடம் 1 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

காஞ்சிபுரம் மாவட்டம், பையனூரில் 26.8.2018 அன்று நடைபெற்ற திரைப்பட கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களால் உருவாக்கப்பட்ட எம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்பு தளத்தின் திறப்பு விழாவில், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்பு தளத்தின் அருகில் அரங்கம் கட்டித்தருமாறு தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. 

அவர்களது கோரிக்கையினை கனிவுடன் ஏற்று, தமிழக முதல்வர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயரில் அரங்கம் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 5 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம், பையனூரில் உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்பு தளத்தின் அருகில் படப்பிடிப்பு தளம் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 5 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என்ற அறிவிப்பிற்கிணங்க, முதல் கட்டமாக தமிழ்நாடு அரசின் சார்பில் 1 கோடி ரூபாய்க்கான காசோலையை தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே. செல்வமணியிடம் வழங்கினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com