ஆக்ஸ்போர்டு அகராதியில் பெண்ணுக்கான அர்த்தத்தை மாற்றக் கோரி 30,000 பேர் மனு..!

ஆக்ஸ்போர்டு அகராதியில் பெண்(woman) என்ற வார்த்தைக்கு தரக் குறைவான அர்த்தம் குறிப்பிடப்பட்டுள்ளதால், அதை மாற்றக் கோரி 30,000 பேர் கையெழுத்திட்ட மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஆக்ஸ்போர்டு அகராதியில் பெண்ணுக்கான அர்த்தத்தை மாற்றக் கோரி 30,000 பேர் மனு..!

ஆக்ஸ்போர்டு அகராதியில் பெண்(woman) என்ற வார்த்தைக்கு தரக் குறைவான அர்த்தம் குறிப்பிடப்பட்டுள்ளதால், அதை மாற்றக் கோரி 30,000 பேர் கையெழுத்திட்ட மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மரியா பீட்ரைஸ் ஜியோவானார்டி என்ற பெண் தான் மனுவை எழுதியுள்ளார். அதில் பெண்(woman) என்ற வார்த்தையின் அர்த்தத்திற்கு பலவீனமானவள், வேசி என பெண்களை இழிவுபடுத்தும் விதமான வார்த்தைகளை ஆன்லைன் ஆக்ஸ்போர்டு அகராதியில் பயன்படுத்தியுள்ளனர். அதாவது “bitch, besom, piece, bit, mare, baggage, wench, petticoat, frail, bird, bint, biddy, filly” என பொருள் தருகிறது. இந்த வார்த்தைகளை கட்டாயம் மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

சாதாரணமாக கூகுளில் மொழிப் பெயர்ப்பிலேயே ’உமன்’ என்ற வார்த்தையை அடித்தாலே அதற்கான விளக்க வாக்கியத்தில் மகளிரை வெறித்தனத்தோடும், அடிமைத் தனத்தோடும் ஒப்பிட்டுள்ளனர்.

இப்படி பெண்களை அர்த்தப்படுத்துவது பாலியல் பொருளாக சித்தரிக்கப்படுகிறது. மேலும் அதில் சில வாக்கியங்கள் பெண்களை அடி பணிந்தவர்கள் என்றும் குறிக்கின்றனர் என்று கூறியுள்ளார்.

அகராதி பொருளடக்க குழுவின் தலைவர் கேத்ரின் கானர் மார்ட்டின்,
இது சம்மந்தமாக விசாரணை தொடங்கியுள்ளோம், விரைவில் மாற்றப்படும் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com