ஆரோக்கியமான முதுமையே அடுத்த இலக்கு

அறுபது வயதுக்கு மேற்பட்ட முதியோர் தங்களின் வாழ்க்கைப் பயணத்தில் நுண்ணறிவு பல பெற்றவர்கள். அவர்களது அனுபவப் பாடத்தைப் பயன்படுத்தி குடும்பங்களும் சமுதாயமும் நாடும் பலன்பெற வேண்டும். 
ஆரோக்கியமான முதுமையே அடுத்த இலக்கு

அறுபது வயதுக்கு மேற்பட்ட முதியோர் தங்களின் வாழ்க்கைப் பயணத்தில் நுண்ணறிவு பல பெற்றவர்கள். அவர்களது அனுபவப் பாடத்தைப் பயன்படுத்தி குடும்பங்களும் சமுதாயமும் அவர்கள் சார்ந்த துறைகளும் மற்றும் இந்த நாடும் பலன்களைப் பெறும் வண்ணம் திட்டங்களைத் தீட்டுவது இன்றைய சூழலுக்கு உகந்தது.

1991 முதல் ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் முதல் நாளை ஐக்கிய நாடுகள் அவை உலக அளவிலான முதியோர் தினமாகக் கடைப்பிடித்து வருகின்றது. அதனடிப்படையில் கரோனா தொற்றுநோய் உலகெங்கிலும் உள்ள வயதானவர்களுக்கு சொல்ல முடியாத அளவிற்கு பயத்தையும் துன்பத்தையும் ஏற்படுத்தியிருப்பதால் இந்த ஆண்டிற்கான முதியோர் தினத்துக்கான கொள்கையாக 'செவிலியர் மற்றும் மருத்துவச்சி ஆண்டு' என்றும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இதன் முழுமையான நோக்கம் உடனடி சுகாதார பாதிப்புக்கு அப்பால், தொற்றுநோய் வயதானவர்களை வறுமை, பாகுபாடு மற்றும் தனிமைப்படுத்துவதற்கான அதிக ஆபத்தில் ஆழ்த்துகிறது. இது இந்தியா உள்பட வளரும் நாடுகளில் வயதானவர்களுக்கு குறிப்பாக பேரழிவு தரக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது.

இந்த ஆண்டு கரோனா வைரஸ் உலகம் முழுவதும் அதிர்வலைகள் பலவற்றை  மனித சமுதாயத்திற்கு  ஏற்படுத்தியுள்ளது.  

வயதின் முதிர்ச்சி சரியாகப் புரிந்து கொள்ளப்படுதல் வேண்டும் என்பது அறிவு சார் உலகின் வேண்டுகோள். சிந்தனை செய்யும் ஆற்றல், சிக்கலான பிரச்சினைகளுக்கும் தீர்வு சொல்லக் கூடியவர்களாக முதியோர் தன்மையினைப் பெற்றிருப்பதால் அவர்களை வயது மூப்பு என்ற ஒற்றை சொல்லுக்குள் சுருக்குவது ஏற்புடையதாகாது. பல்வேறு துறைகளில் சாதனைகளை இன்றும் முதியோர் பலர் நிகழ்த்தி வருகின்றனர்.

இன்றைய இளைய சமுதாயம் வயதானவர்கள் எதிர்கொள்ளும் அதிக ஆபத்துகளைக் கருத்தில்கொண்டு, கொள்கை மற்றும் நிரல் தலையீடுகள், அவர்களின் சிறப்புத் தேவைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இலக்காகக் கொள்ள வேண்டும்.

வயதானவர்கள் தங்கள் சொந்த ஆரோக்கியத்திற்கான பங்களிப்புகளையும் தற்போதைய மற்றும் எதிர்கால தொற்றுநோய்களின் தயார்நிலை மற்றும் மறுமொழி கட்டங்களில் அவர்கள் வகிக்கும் பல பாத்திரங்களையும் அங்கீகரிப்பது முக்கியம்.

இவ்வாண்டிற்கான வயதானவர்களின் சர்வதேச தினம் 2020 வயதானவர்களின் ஆரோக்கியத்திற்கு பங்களிப்பதில் சுகாதாரப் பணியாளர்களின் பங்கை எடுத்துக் காட்டுகிறது. செவிலியர் தொழிலுக்கு சிறப்பு அங்கீகாரம் மற்றும் பெண்களின் பங்கு குறித்த முதன்மைக் கவனம் ஒப்பீட்டளவில் குறைவாக மதிப்பிடப்பட்ட மற்றும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் போதிய ஈடு செய்யப்படவில்லை நாம் கவனத்தில் கொள்ளல் அவசியம்.

வரும் பத்தாண்டுகளில் 2020 முதல் 2030 வரை திட்டங்கள் பலவற்றைத் திறம்பட ஊக்குவிக்கும் வண்ணம் ஐக்கிய நாடுகள் அவை சமூகம், அரசு மற்றும் சுகாதாரத் தொழில்களை ஒன்றிணைத்து வயதானவர்களின் உடல்நலம் குறித்த உலகளாவிய வியூகம் மற்றும் செயல் திட்டத்தின் முக்கிய நோக்கங்களைப் பற்றி விவாதிக்க உதவும். வயதானவர்களின் சிறப்பு சுகாதாரத் தேவைகள் மற்றும் அவர்களின் உடல்நலம் மற்றும் அவர்கள் வாழும் சமூகங்களின் செயல்பாடுகள் குறித்த அவர்களின் பங்களிப்புகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல், சமூக அறிவியல்கள், மருத்துவம், கொள்கை அளவிலான முடிவுகள் மேற்கொள்ளும் அமைப்புகள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் பங்களிப்பு இங்கே அவசியமானதாகிறது.

செவிலியர் தொழிலில் சிறப்புக் கவனம் செலுத்தி, வயதானவர்களின் ஆரோக்கியத்தைப் பராமரிப்பதிலும், மேம்படுத்துவதிலும் சுகாதாரப் பணியாளர்களின் பங்கு குறித்த விழிப்புணர்வையும் பாராட்டையும் அதிகரித்தல் அவசியமான பணியென ஐக்கிய நாடுகள் அவை முன்னெடுக்கிறது.

வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் வயதானவர்களுக்கு இடையிலான சுகாதார ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்கான தற்போதைய திட்டங்களால் முதியோர் உள்பட்ட அனைவரையும் கவனத்தில்கொள்ள வேண்டும் என்பது இன்றைய குறிக்கோளாக அமைந்ததென்றால் சாலச்சிறந்தது. சமீப ஆண்டுகளில் உலக மக்கள்தொகையின் அமைப்பு வியத்தகு முறையில் மாறிவிட்டது. 1950 மற்றும் 2010 க்கு இடையில், உலகளவில் ஆயுட்காலம் 46 முதல் 68 ஆண்டுகளாக உயர்ந்தது. உலகளவில், 2019 ஆம் ஆண்டில் 65 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையோர் 70.3 கோடியாக இருந்தனர்.

கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான முதியவர்கள் 26.1 கோடியாகவும், ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் இருபது கோடிக்கும் அதிகமானவர்கள் உள்ளனர். அடுத்த முப்பதாண்டுகளில் உலகெங்கிலும் உள்ள வயதானவர்களின் எண்ணிக்கை இரு மடங்கிற்கும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வட ஆப்பிரிக்காவிலும் மேற்கு ஆசியாவிலும் வயதானவர்களின் எண்ணிக்கையில் மிக விரைவான அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்ததாக மிக விரைவான அதிகரிப்பு சஹாரா ஆப்பிரிக்காவில் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு மாறாக, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து மற்றும் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் இந்த அதிகரிப்பு ஒப்பீட்டளவில் சிறிதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தைகைய சூழலில் ஆரோக்கியமான முதுமை என்பது வயதான காலத்தில் நல்வாழ்வை செயல்படுத்தும் செயல்பாட்டுத் திறனை வளர்ப்பது மற்றும் பராமரிப்பது.

செயல்பாட்டுத் திறன் என்பது அனைத்து மக்களையும் இருக்கக்கூடிய திறன்களைக் கொண்டிருப்பது மற்றும் அவர்கள் மதிப்பிடுவதற்கான காரணத்தைச் செய்வது. ஒவ்வொரு நபருக்கும் உலகின் ஒவ்வொரு நாட்டிலும், நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வாய்ப்பு இருக்க வேண்டும். ஆனாலும், நாம் வாழும் சூழல்கள் ஆரோக்கியத்திற்கு சாதகமாக இருக்கலாம் அல்லது மாறுபட்டும் இருக்கலாம். ஆயினும், ஆரோக்கியமான வயதானது என்பது மக்கள் மற்றும் அவர்களின் வாழ்நாள் முழுவதும் அவர்கள் மதிப்பிடுவதைச் செய்யக்கூடிய சூழல்களையும், வாய்ப்புகளையும் உருவாக்குவதாகும். இதுவே, அவர்கள் ஆரோக்கியமான முதுமையை அனுபவிக்க ஏதுவாக இருக்கும்.

இந்தியாவில் தற்பொழுதுள்ள எட்டு சதவீதமாக உள்ள அறுபது வயதிற்கு மேற்பட்ட முதியவர்களின் எண்ணிக்கை 2050ல் இருபது சதவீதமாக அதிகரிக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. வலிமை மிக்க சமுதாயமாக மாற முதியோர்களை உள்ளடக்கிய சிறப்பான திட்டங்களை வகுத்து அவற்றைச்  செயலாக்குவதில் பங்கெடுப்போம்.


[கட்டுரையாளர் - மேனாள் பேராசிரியர் மற்றும்

துறைத் தலைவர், சமூகவியல் துறை,

பெரியார் பல்கலை., சேலம்]

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com