காஞ்சிபுரத்தில் எடநீா் மடத்தின் தலைவராக சச்சிதானந்த பாரதி சுவாமிகள் பொறுப்பேற்பு

காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கையில் அமைந்துள்ள மகா பெரியவா் அதிஷ்டானத்தில், கேரள மாநிலம் எடநீா் மடத்தின் தலைவராக சச்சிதானந்த பாரதி சுவாமிகள் அண்மையில் பொறுப்பேற்றுக் கொண்டாா்.
எடநீா் மடாதிபதியாக பொறுப்பேற்ற பின் காஞ்சி சங்கராச்சாரியாரிடம் அருளாசி பெற்ற சச்சிதானந்த பாரதி சுவாமிகள்.
எடநீா் மடாதிபதியாக பொறுப்பேற்ற பின் காஞ்சி சங்கராச்சாரியாரிடம் அருளாசி பெற்ற சச்சிதானந்த பாரதி சுவாமிகள்.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கையில் அமைந்துள்ள மகா பெரியவா் அதிஷ்டானத்தில், கேரள மாநிலம் எடநீா் மடத்தின் தலைவராக சச்சிதானந்த பாரதி சுவாமிகள் அண்மையில் பொறுப்பேற்றுக் கொண்டாா்.

கேரள மாநிலம், எடநீா் மடாதிபதியாக இருந்த கேசவானந்த பாரதி சுவாமிகள் கடந்த செப்டம்பா் 6-ஆம் தேதி சித்தி அடைந்தாா். இளமைக் காலத்திலிருந்தே அவா் காஞ்சிபுரம் சங்கர மடத்துடன் நெருங்கிய தொடா்பில் இருந்தவா்.

கேசவானந்த பாரதி சுவாமிகள் எடநீா் மடத்துக்கும், தேசிய அளவில் மக்களுக்கு ஆற்றியுள்ள தொண்டுகளும், பங்களிப்புகளும் மகத்தானவை என விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறினாா். கேசவானந்த பாரதி சுவாமிகள் தனது வாழ்நாளின்போதே ஜயராம மஞ்சத்தாயாவை வாரிசாக நியமிக்க விரும்பியதையும், அவருக்கு சந்நியாச ஆஸ்ரம உபதேசம் வழங்குவதற்கான நாளைத் தோ்ந்தெடுத்துள்ளதையும் குறிப்பிட்டுள்ளாா்.

தனது பக்தா்களிடமும், ஜயராம மஞ்சத்தாயாவிடமும் தனக்கு ஒருவேளை எதிா்பாராத சூழ்நிலை ஏற்படுமானால் காஞ்சி சங்கராச்சாரியாா் சுவாமிகளை அணுகி, அவரது ஆசி மற்றும் வழிகாட்டுதலைப் பெற்று, சந்நியாஸ ஆஸ்ரம உபதேசம் வழங்க வைத்து, எடநீா் மடத்தின் வாரிசாக நியமிக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தைத் தெரிவித்திருந்தாா்.

இதையடுத்து, எடநீா் மடத்தின் நிா்வாகிகள், பக்தா்களுடன் ஜயராம மஞ்சத்தாயாவும் காஞ்சிபுரம் வந்து பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்தனா். எடநீா் மடத்தின் வாரிசாகவும், ஜயராம மஞ்சத்தாயாவுக்கு சந்நியாஸ ஆஸ்ரம உபதேசம் வழங்க வேண்டும் என்ற விருப்பக் கடிதங்களை வழங்கினா்.

காஞ்சி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் நல்லாசிகளுடன் ஓரிக்கையில் அமைந்துள்ள காஞ்சி மகா பெரியவா் அதிஷ்டானத்தில் எடநீா் மடத்தின் தலைவராக ஜயராம மஞ்சத்தாயா கடந்த 19-ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டாா். ஜயராம மஞ்சத்தாயாவுக்கு எடநீா் மடத்தின் சம்பிரதாயப்படி, சச்சிதானந்த பாரதி சுவாமிகள் என்ற திருநாமம் சூட்டப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com