சர்வதேச ஊழல் ஒழிப்பு தினம் இன்று!

சர்வதேச அளவில் ஊழலை ஒழிக்கும் நோக்கத்திற்காக கடந்த 2003- ம் ஆண்டு அக்டோபர் 31- ம் நாள் ஐ.நா. அவையால், டிசம்பர் 9 ம் தேதி சர்வதேச ஊழல் ஒழிப்பு தினமாக அறிவிக்கப்பட்டது. 
சர்வதேச ஊழல் ஒழிப்பு தினம் இன்று!

ஊழல் ஒழிப்பு தினம்... 

சர்வதேச அளவில் ஊழலை ஒழிக்கும் நோக்கத்திற்காக கடந்த 2003- ம் ஆண்டு அக்டோபர் 31- ம் நாள் ஐ.நா. அவையால் டிசம்பர் 9 ம் தேதி சர்வதேச ஊழல் ஒழிப்பு தினமாக அறிவிக்கப்பட்டு தற்போது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

லஞ்சம், ஊழல் என்பது கடுமையான குற்றச்செயல். ஊழலைத் தடுப்பதோடு, ஊழலை ஒழிக்கவும், இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதுமே ஊழல் ஒழிப்பு தினத்தின் முக்கிய நோக்கமாகும்.

ஜெர்மனியை தளமாகக் கொண்ட டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்ற நிறுவனம், உலகின் 180 நாடுகளில் ஊழல் குறித்து ஆய்வு மேற்கொண்டு ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் அரசு அலுவலகங்கள், பொது வணிக நிறுவனங்களில் நடைபெறும் ஊழலை அடிப்படையாகக் கொண்டு இந்த பட்டியல் தயாராகிறது.

இந்தப் பட்டியலில் 2016 ல் 79-வது இடத்திலும், 2017 ல் 81-வது இடத்திலும், 2018-ல் 78-வது இடத்திலும், 2019 ல் 80-வது இடத்திலும், 2020 ல் 180 நாடுகளில் மேற்கொண்ட ஆய்வில் 40 மதிபெண்களுடன் 86-வது இடத்தையும் இந்தியா பெற்றிருக்கிறது.

பொதுத்துறையில் நிலவும் ஊழலின் அளவைக் கொண்டு 0 முதல் 100 வரையிலான மதிப்பெண்களுடன் ஊழலை வகைப்படுத்தியுள்ளன. அதாவது, அதிக மதிப்பெண் உள்ள நாடுகள் ஊழல் குறைந்ததாகவும், குறைவான மதிப்பெண்கள் கொண்ட நாடு ஊழல் அதிகமானதாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் 88 மதிப்பெண்களுடன் டென்மார்க், நியூசிலாந்து ஊழல் குறைந்த நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும், அந்த ஆய்வில் ஊழலுக்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதில் அரசாங்கத்தின் சமூக நலத் திட்டங்களினால் பயனாளிகள் பயன்பெறுவதற்கு அதிகாரிகளுக்கு கையூட்டு கொடுத்தால் மட்டுமே பணத்தைப் பெற முடியும் என்றும், உதாரணமாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் மற்றும் தேசிய ஊரக சுகாதார இயக்கம் ஆகியவைகள் இந்த ஊழலுக்கு முக்கியப் பங்காற்றுவதாகவும், நெடுஞ்சாலைகளில் உள்ள கண்காணிப்பு மற்றும் காவல்துறை சோதனை நிறுத்தங்களில் பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை லஞ்சமாக செலுத்த வேண்டிய கட்டாயத்தில் பயனாளிகள், வாகன ஓட்டிகள் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

புரையோடி போன ஊழல், லஞ்சம் லாவண்யத்தை ஒழிக்க ஊழல் ஒழிப்பு தினம் கொண்டாடப்படுவதோடு நின்று விடாமல் பொதுமக்களும் கையூட்டு கொடுக்காமல் காரியத்தை சாதிக்கும் முறையை கண்டறிந்து தாமதமானாலும் தவறில்லாமல் பயன்களை பெற முயற்சிக்க வேண்டும்.

கடமையைச் செய்வதற்கு பலனை எதிர்பார்க்காமல் அரசு அதிகாரிகள், அலுவலர்கள் பெயரளவுக்கு என்று பணியாற்றாமல் 'ஊழலை ஒழிப்போம்; உண்மையாக நடப்போம்' என உளமாற உறுதி மொழியேற்று அதை தன் உயிருக்கும் மேலாக கடைபிடித்தால் மட்டுமே ஊழலற்ற புது உலகை உருவாக்க முடியும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com